இறைவன் அழைக்கிறார்... என்ன சொல்ல போகிறாய்?
வேண்டாம் என்று அழைப்பை துண்டித்து விடலாம். இன்று பலரும் அதை தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். வேண்டாம் என்று கடவுளை தள்ளி வைத்து இருக்கிறார்கள். நமது முடிவுகள், நாம் தேர்ந்துகொள்ளும் உண்மைகள், நாம் தரும் முக்கியத்துவங்கள் இவைகளில் எல்லாம் உலகம் இன்று இறைவனின் அழைப்பை நிராகரித்தே வருகிறது.
இதற்கு நான் பிறகு பதிலளிப்பேன் என்று தள்ளி வைக்கலாம். ஆனால் இறைவன் கூறுவது அது அல்ல... நேரம் நெருங்கிவிட்டது, இனியும் உங்கள் பதிலை நீங்கள் தள்ளி போட இயலாது... இன்றே இப்போதே உங்கள் தேர்வு என்ன என்பதை தெரளிவு படுத்துங்கள், என்கிறார். சீடர்களை பாருங்கள்... அவர் அழைத்தார் அவர்களும் உடனே அவரை பின் தொடர்ந்தனர் என்கிறது நற்செய்தி.
இறைவனிடம் நமது மாற்றுக் கருத்தை தெரிவிக்கலாம். இறைவனிடமே மாற்று கருத்தா என்று நாம் சிந்தித்ததாலும் இதை தான் பலமுறை செய்கிறோம்... நம் மனதிலே ஒன்றை நினைத்துக்கொண்டு அப்படியே நடக்க வேண்டும் என இறைவனை நிர்பந்திக்கின்றோம். யோனா அதையே முயற்சித்தார். அனால் இறைவன் சற்றே கடினமான முறையிலானாலும், அவருக்கு சரியானது எது என்று உணர்த்தினார். அப்படி இறைவன் உணர்த்தும் படியாக தன்னை இறைவன் கைகளில் சரணாக்கினார் யோனா...அதுவே அவரது சீடத்துவத்தை எண்பிக்கிறது.
இறுதியாக...உண்மையிலேயே நாம் செய்ய வேண்டியது...சீடர்களை போல அழைக்கும் இறைவனின் குரல் கேட்டு உடனே அவருக்கு பதில் அளிப்பதே ஆகும். இதோ இறைவா உம திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன் என்று எழுந்து நடந்திட வேண்டும் என்று இறைவார்த்தை நமக்கு பணிக்கின்றது. இறைவனின் அழைப்பை ஏற்போம், பேசும் இறைவா அடியேன் கேட்கின்றேன் என்று இன்றே பதிலளிப்போம்.