Wednesday, October 3, 2018

The Gift of Christ: Peace

Celebrating the Apostle of Peace, St. Francis of Assisi

October 4, 2018: Job 19: 21-27; Lk 10: 1-12

Francis of Assisi is considered a man who managed the maximum resemblance to Christ in his life, not so much due to the marks of the stigmata that he received from the Lord, but more due to the gift of Christ that he offered the world all his life - that is Peace. When you enter a house, greet them: Peace be with you, instructs Jesus in the Gospel today. 

Especially today, with the rising fanaticism around the world, we are called to be truly instruments of peace that comes from the self emptying Christ. Don't think I am referring only to the fanatic terrorists who are threatening the peace of the world, those who are threatening to destroy the Church from outside but more to the fanatics in the garb of Christians, people who are insisting on rules and rubrics, legalities and orthodoxy, the ego and hierarchy, to such an extent that mercy and understanding, dialogue and compassion find no place within the practice of faith and religion. People are thrown into confusion and frustration more by these than by those from outside!  

Francis came at a time when the  Church was wounded due to various spiritual calamities within the Church in the 10th and the 11th century and he treated those wounds with the compassion of the Lord, the humility of the Son of God and the peace of the Prince of Peace. He showed us that the marks of Christ that all of us can bear in our life, are exactly these: to be instruments of peace, through love, pardon, faith, hope, light, joy, consolation and new life. Today, as Pope Francis says, the Church is somewhat in a similar situation beaten and bruised from within and from without, however the accuser, the avenger is ruthlessly rampant against the Church.

May St. Francis assist us to understand the difference between true holiness and self righteousness, the distance between love and legalism and the need to move from being Christians to becoming Christ ourselves! Let us be true instruments of Peace, the true gift of Christ.


அமைதி தரும் அமைதி

புனித பிரான்சிஸ்கு அசிசியார் நினைவு 

அக்டோபர் 4, 2018: யோபு 19:21-27; லூக் 10: 1-12

வரலாற்றிலே கிறிஸ்துவை மிக நெருக்கமாய் பிரதிபலித்தவர்களில் முதன்மையான புனிதர் தூய பிரான்சிஸ்கு அசிசியார் என்பார்கள். கிறிஸ்துவின் ஐந்து காயங்களை இவர் பெற்றிருந்த காரணத்தினால் மட்டுமல்ல, மாறாக கிறிஸ்து மட்டுமே தரக்கூடிய மாபெரும் கொடையான உண்மையான அமைதியை இவர் தன் வாழ்நாள் முழுதும் உலகிற்கு அறிவுறுத்தியமையாலே. நீங்கள் எந்த வீட்டிற்குள் சென்றாலும், 'இந்த வீட்டிற்கு அமைதி உண்டாகுக' என்று கூறுங்கள், என்று கிறிஸ்து தன் திருத்தூதர்களிடம் கூறுவதை நாம் இன்றைய நற்செய்தியில் காண்கின்றோம். 

சிறப்பாக அடிப்படைவாதமும் தீவிரவாதமும் கோலோச்சிவரும் இந்த நாட்களிலே, வெறும் அரசியல் அல்லது சமய தீவிரவாதம் அல்ல, ஆனால் எல்லா நிலைகளிலும், தரப்பிலும், சூழலிலும் நாம் காண்கின்ற அடிப்படைவாத  பிரிவினைவாத சுயநலவாத ஆற்றல்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அன்று புனித பிரான்சிஸ் பத்தாம் பதினோறாம் நூற்றாண்டில் வந்தபோது இருந்தது போலவே, இன்று திருச்சபை பல சோதனைகளை, சவால்களை, காயங்களை, இடறல்களை, இழுக்குகளை எதிர்கொண்டவண்ணமே இருக்கிறது. என்ன செய்யப்போகிறோம்? கசப்போடும், பழிவாங்கும் எண்ணத்தோடும், வஞ்சம் தீற்கும் உள்ளத்தோடும் செயல்பட போகிறோமா? அல்லது கிறிஸ்துவை போன்று நம்பிக்கை தரும் ஆழ்ந்த அமைதியில் உண்மையை சந்திக்கப்போகிறோமா? அது நம் கைகளிலேயே உள்ளது என்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உலகை, தன் மக்களாகிய நம்மை தேடி வந்த அமைதியாம் இறையேசு தரும் அமைதியை நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வோம்; அமைதி தரும் அதே அமைதியை உலகோடு பகிர்வோம் , அமைதியின் கருவிகளாவோம்.