அக்டோபர் 13, 2018: கலா 3: 22-29; லூக் 11:27-28
நாங்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள், நான் இந்த சபையை சார்ந்தவன், நான் அந்த முழுக்கு பெற்றவன், நான் இரட்சிக்கப்பட்டவன், என்றெல்லாம் பிதற்றிக்கொள்வதில் இல்லை நாம் கடவுளுக்கு உரியவர்களா இல்லையா என்பது! ஏனெனில் யூதரென்றும் புறவினத்தாரென்றும், ஆணென்றும் பெண்ணென்றும், அடிமையென்றும் உரிமை குடிமக்களென்றும், எதுவும் இனி பொருள் தராது... பொருள் தரக்கூடியதெல்லாம் ஒன்றே: கிறிஸ்துவை நாம் அணிந்திருக்கிறோமோ, அவராகவே நாம் மாறியிருக்கிறோமா, அவரது உடன்பிறப்புக்களாய், கடவுளின் பிள்ளைகளாய் நாம் மாறி வாழுகின்றோமோ, வளருகின்றோமா என்பதே என்றும் பொருள் தரும் என்கிறார் பவுலடிகளார்.
கடவுளுக்குரியவர்களாய், கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் உணர்வது என்பது ஒரு ஆன்மிக அனுபவம், அது வெறும் பெயரளவில் நிகழ்வது அல்ல. நான் உங்களை பணியாளர்கள் என்று கருதவில்லை, என் நண்பர்களாய் உங்களை அனுப்புகிறேன் என்று கிறிஸ்து நம் ஒவ்வொருவரையும் பார்த்து கூறுகிறார். அவரது அன்பில் நிலைத்திருக்க நம்மை அழைக்கிறார். நான் உங்கள் கடவுளாய் இருப்பேன் நீங்கள் என் மக்களாய் இருப்பீர்கள் என்ற உடன்படிக்கையின் நிறைவல்லவா அவர்! ஆகவே, கடவுளுக்கு உரியவர்களாக இருப்பதும் கிறிஸ்துவுக்கு நெருக்கமானவர்களாக இருப்பதும் எனக்குள்ளாக இருக்க வேண்டிய ஒரு அவா, ஏக்கம், கனவு... அதை நோக்கி வளர்வது என் பொறுப்பு!
ஆம் இது தானாக வருவது கிடையாது, நானாக வளர்த்துக்கொள்ள வேண்டியது! நான் திருமுழுக்கு பெற்றுவிட்டேன் என்பதனால் மட்டுமே நான் கடவுளின் பிள்ளையாகிவிட முடியாது, அந்த திருமுழுக்கின் அருளிலே நான் வளரும்போது தான் அந்த அடையாளத்தை நான் உறுதி செய்கிறேன். கிறிஸ்துவின் மனநிலையில் நான் வளரவேண்டும்...அவரது வார்த்தைகளை கேட்டு, அதை மனதில் நிறுத்தி, அதை நான் வாழ்வாகும் போது தான் உண்மையிலேயே நான் கிறிஸ்துவின் உடன்பிறப்பாகிறேன், அவரது உறவாக மாறுகிறேன்.
இதை தான் கிறிஸ்து இன்றைய நற்செய்தியில் விளக்குகிறார்... என்னை பெற்றெடுத்ததால் மட்டும் அவள் உயர்ந்துவிடவில்லை, ஆனால் இறைவார்த்தையை கேட்டதால், அதை மனதில் நிறுத்தியதால், அதன் படி வாழ முன்வந்தால், முற்றிலும் அந்த வார்த்தைக்காகவே தன்னையே அர்பணித்ததால் மரியாள் கடவுளுக்குரியவளாகிறாள், கிறிஸ்துவின் உறவாகிறாள்!
வார்த்தைக்கு செவிமடுப்போம், வார்த்தையை வாழ்வாக்குவோம், கடவுளின் பிள்ளைகளாவோம், கிறிஸ்துவின் உறவினர்களாவோம், அவரது உடன்பிறப்புக்களாவோம்.