Wednesday, October 10, 2018

The pity of forgetfulness

Thursday,  27th week in ordinary time

October 11, 2018: Gal 3: 1-5; Lk 11: 5-13

Do you remember this character, Dory from the famous movie 'Finding Nemo' and 'Finding Dory'? She is known for her forgetfulness...she ends up asking every moment to those with her, 'who are you'? At times she even forgets who she is. 

Forgetfulness can lead to embarrassing situations, sometimes to unfortunate predicaments too. No, we are not talking about the Gospel where the man in question forgets that his friend is going to visit him or the friend who forgets to inform him about his visit,  maybe. We are talking about the Galatians who forgot so prematurely their true identity and Paul gets so angry with them.

At times when we forget our true identity,  the identity that we inherit in the Lord,  we end up so foolish, lost in our egoism, legalism and materialism. All these three will disorient us from who we really are and make us unable to approach the Lord with a childlike trust to ask,  seek and to knock.

Asking, knocking, seeking are acts of faith, they are not acts of some desperate effort to get something by all means. They are acts of faith by which we live our convictions that, even before asking the Lord knows my needs; to knock is to surrender oneself totally, come what may; and to seek is not a call to seek in vain or in all-emptiness but to seek the person who lives within us, who dwell within us, who makes us the dwelling places of God (cf 1 Cor 3:16; 6:19).Once we possess the Spirit, we would need nothing: Seek ye first the Reign of God, and everything will be given unto you. Once we forget this identity that we possess, then we have nothing to hold on to, like persons in amnesia - inspite of having everything and everyone around, they would not realise it all - that is the pity of forgetfulness! 

மறதி என்னும் கொடுமை!

அக்டோபர் 11, 2018: கலா 3:1-5; லூக் 11: 5-13

மறதி என்பது ஒரு கொடுமையான நிலை... பைண்டிங் நீமோ மற்றும் பைண்டிங் டோரி என்ற அசைவூட்டு திரைப்படங்களை (அனிமேஷன் திரைப்படங்கள்) பார்த்தவர்களுக்கு அதில் வரும் டோரி என்னும் ஒரு பாத்திரம் நினைவிருக்கும். அது மறதி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவ்வப்போது தன்னோடு இருப்பவர்களை பார்த்தே, நீ யார் என்று கேட்கும் வேடிக்கை தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். வேடிக்கையாக இருந்தாலும் ஒரு கட்டத்திலே தானே யாரென்று தெரியாமல் தத்தளிக்கும் போது மறதியின் கொடுமை மிக தெளிவாக விளங்கும். 

மறதி என்பது மிக கொடுமையான, வருத்தத்திற்குரிய நிலைக்கு ஒருவரை அழைத்து செல்ல கூடியதாகும். இதை நான் கூறும் போதே, இன்று நற்செய்தியில் வரும் கதையில் அந்த நபர் தான் வருவதாக தன்  நண்பரிடம் கூற மறந்ததை குறித்தோ, தன் நண்பர் வருவார் என்பதை மறந்த அந்த விட்டுத்தலைவனை குறித்தோ நான் பேசவிருக்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது சரியல்ல. ஏனெனில், நாம் சிந்திக்கவேண்டியது, தங்கள் உண்மை அடையாளம் என்ன, தாங்கள் கேட்டு மனமாறிய நற்செய்தியென்ன என்பதை வெகு விரைவில் மறக்க நேர்ந்த கலாத்தியரை குறித்தே! இதனாலேயே அவர்களை கடுமையாய் சாடுகிறார் பவுலடிகளார். 

நாம் பல வேளைகளில் நமது உண்மை அடையாளத்தை வெகு எளிதில் மறந்து விடுகிறோம். உண்மையிலேயே நம்மை அழைத்த இறைவன், அவர் தந்த அழைப்பு, நாம் பெற்றுக்கொண்ட கொடைகள் இவற்றை எல்லாம் மறந்து, தான் என்ற அகந்தையிலும், சட்டம் சம்பிரதாயம் என்னும் போதையிலும், பெயர் புகழ் என்ற மடமையிலும் நம்மையே இழந்துவிடுகிறோம். இந்நிலையில், நமது உண்மை இலக்கு என்ன, நாம் சென்று சேர வேண்டிய இறைவன் எங்கே, நமக்கு தரப்பட்ட வாழ்முறை என்ன என்பதையெல்லாம் மறந்து நிற்கிறோம். இறைவனை கேட்கவோ, அவர் கதவை தட்டவோ, அவரது சித்தத்தை தேடவோ நமக்கு நினைவே வருவதில்லை.

ஆம், அகந்தை, தன்னலம், ஆன்மீகமற்ற நிலை இவற்றினால் நாம் இறைவனின் பிள்ளைகள், அவரது அன்பிலே வளர்ந்தவர்கள், அந்த அன்பை இவ்வுலகிற்கு அளிக்க அனுப்பப்பட்டவர்கள் என்பதே நமக்கு மறந்துவிடுகிறது... இது கொடுமையல்லவா!

இறையாட்சிக்கான இதயம்

அக்டோபர் 10, 2018: கலா 2:1-2, 7-14; லூக் 11:1-4

இன்றும் தொடர்ந்து பவுலடிகளார் திருச்சபையின் அப்போஸ்தலராக உருவான தொடக்க நாள்களை குறித்து பேசுகிறார். இன்று அவர் கூறும் நிகழ்வும் நற்செய்தியில் கிறிஸ்து கற்று தரும் பாடமும் இணைந்து, இறையாட்சிக்குரிய மனநிலை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டுமென நமக்கு விளக்குகின்றன. இவற்றில் மூன்று மனநிலைகளை மட்டும் அடிக்கோடிடுவோம். 

தனிப்பட்ட ஒருமைத்தன்மை அல்லது நாணயம் எனப்படும் குணமே பவுலடிகளாருக்கு பெரும் ஆற்றலை தந்தது. இன்று தனது திருமுகத்தில் எவ்வாறு பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் இந்த ஒருமைத்தன்மை இல்லாமைக்கு கடிந்துகொள்ள நேர்ந்தது என்பதை நமக்கு விளக்குகிறார். தாங்கள் போதிப்பது ஒன்றாகவும் வாழ்வது வேறாகவும் இருந்ததை அவர்களை உணர வைக்கிறார் பவுலடிகளார். நான் பேசுவதும், நம்புவதும், வாழ்வதும் ஒருங்கமைந்த நிலையே ஒருமைத்தன்மையாகும்... இந்த தன்மை இல்லாமல் இறைவார்த்தையை வல்லமையோடு யாராலும் அறிவிக்கமுடியாது.

பயமரியாத்தன்மை என்பது அசைக்கமுடியாத நம்பிக்கையிலிருந்து பிறக்கின்றது. இறைவன் எனது தந்தை, தாய், என்னை அளவற்ற அன்போடு நேசிக்கிறவர் என்ற ஆழமான நம்பிக்கை என்னில் இருப்பின் இதைக்குறித்து பயமறியாது நிலை என்னில் பிறந்துவிடும். இறையாட்சியை காட்டிலும் முக்கியமானது ஏதும் இல்லை என்ற எண்ணம் என்னிலே வந்துவிட்டால் அதற்காக நான் உழைப்பதை எதுவும் தடுக்க முடியாது என்பதே உண்மை. 

மன்னிப்போடு கூடிய திருத்தங்கள் நல்ல உறவுக்கான அடையாளங்களாகும். உறவை பாதுகாத்துக்கொள்ள ஒருவர் செய்யும் தவறுகளையெல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது சரியல்ல. அதே சமயம் தவறுகளை சுட்டிக்காட்டுகிறேன் என்ற பெயரில் அடுத்தவரை மதிக்காது, அவரை தீர்ப்பிட்டு, அவர் பெயரை களங்கப்படுத்தி, அவர் மனதை ஆழமாய் காயப்படுத்துவதும் இறையாட்சிக்குரிய மனநிலை அல்ல. திருத்தினாலும் தீர்ப்பிடாது, தவறுகளை சுட்டிக்காட்டினாலும் மன்னிக்க தயாராய் இருக்கும் மனநிலையே இறையாட்சிக்கு உரியது! 

இந்த குணங்கள் நிறைந்தவர்களே இறையாட்சிக்குரிய இதயங்கள் என்று இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கிறது... நாம் இந்த வரையறைக்குள் இடம் பெருமவோமா?