தீயினில் புடமிடப்படும் பொன்னாய் மின்னிட
1 பேதுரு 1: 3-9; மாற் 10: 17-27
புடமிடப்படுதல் என்பது பொன்னுக்கு அவசியம்... அது தீயினால் சுடப்பட்டு, உருக்கப்பட்டு, தூய்மையாக்கபட்டு உருப்பெறுதலாகும்... பேதுரு இன்று நமது மண்ணக வாழ்வின் அனுபவத்தை தீயினில் புடமிடப்படுதலுக்கு ஒப்பிடுகிறார் - புடமிடப்படுவது நமது "நம்பிக்கை". நான் இறைவனை நம்புகிறேன், இறைவனின் பிள்ளை நான் என்பதை உறுதியாக ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று சொல்லினால் உறுதி படுத்தினால் போதாது ஆனால் நமது வாழ்வின் அன்றாட அனுபவங்களில், துன்பங்களில், சோதனைகளில். அதை நாம் உறுதிப்படுத்தவேண்டும், சாட்சியம் பகர வேண்டும்.
இறைவனுக்கு உரியது ஏற்றது எது என்பதை உணர்ந்து அதன் படி நம் வாழ்வை அமைத்துக்கொள்வதும் அவற்றையே தவறாமல் தேர்ந்துகொள்வதுமே நமது நம்பிக்கையை நாம் உறுதிப்படுத்தும் வழிகளாகும். இன்றோ பலரும், தங்களுக்கு வசதியானதை, துன்பம் தராததை, அதிகம் தொந்தரவு தராததை தேர்ந்துகொள்வதிலேயே குறியாய் இருப்பதை நாம் காண்கிறோம். உண்மை, கடவுளுக்கு ஏற்றது, சரியானது, நேர்மையானது என்ற காரணங்கள் அனைத்தும் இடம்தெரியாமல் மறைந்து போவதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
துன்பங்கள், சோதனைகள், இன்னல்கள் என்னும் தீயினில் புடமிடப்பட, புடமிடப்பட்ட பொன்னாய் மின்னிட நான் தயாரா?