நீ அழைத்துச்செல்ல படுவாய்!
தி ப. 25: 13b-21;யோ 21: 15-19
தனக்கு அடுத்து தனது பணியை தொடர வேண்டிய இறைசமூகத்தை யார் வழிநடத்த வேண்டும் என்று கிறிஸ்து சிந்திக்க தொடங்குகிறார். பேதுருவை பாறையென்று ஏற்கெனவே நிறுவியாயிற்று. மற்ற சீடர்களுக்கும் அவர்களது பொறுப்புக்களை விளக்கியாயிற்று. பவுலடிகளாரையும் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரை செல்ல தயாரித்தாயிற்று... உண்மையிலேயே கிறிஸ்துவின் மனநிலையில் தலைமைத்துவம் என்றால் என்ன என்பதை கிறிஸ்து விளக்குகிறார்.
கோலோச்சுவதோ, ஆணைகளிடுவதோ, அதிகாரம் செலுத்துவதோ, பதவிகள் வகிப்பதோ, பல்லக்கில் பயணிப்பதோ அல்ல... ஆனால், சாட்சியம் பகர்வதும், சேவைகள் புரிவதும், துன்பங்கள் ஏற்பதும், இட்டுச்செல்லப்படும் வழிகளில் தயக்கமின்றி நடப்பதும் தான் தலைமைத்துவமாகும். உண்மையில் காணச்சென்றால், திருமுழுக்கு பெற்ற ஒவ்வொருவரும் செய்ய வேண்டியவை இவை... தலைவர்கள் எனப்படுபவர்கள், இதில் தேர்ச்சிபெற்றவர்களாய் மக்களுக்கு முன் செல்ல வேண்டியவர்கள்... ஏனெனில், உண்மை தலைவர், உண்மை வழிநடத்துனர், தூய ஆவியாரே!
அவரே நம்மை அழைத்து செல்லுகிறார், அனுப்பி வைக்கிறார், வழி நடத்துகிறார். உண்மை தலைவர்கள் வழிநடத்த துடிப்பதை காட்டிலும், துடிப்போடு வழிநடக்க கற்றுக்கொள்ளவேண்டும் - தூய ஆவியார் காட்டும் வழியில் நடக்க பயிலவேண்டும் ... அவரே உண்மை தலைவராவார்.