அவரோடு அவரைப்போன்றே வாழப் பயில்வோம்.
என்னை அவரது உருவிலும் சாயலிலும் படைத்த இறைவனின் பிள்ளை நான் என்ற அடையாளத்தோடு தான் நான் வாழ்கின்றேனா, என்ற ஆழமான கேள்வியை எழுப்புகிறது இன்றைய இறைவார்த்தை. அவரது உருவின் பல பரிமானங்களில் சிறப்பான ஒன்று மன்னிப்பு. இறைவன் நமது பாவங்களை மன்னிக்காவிடில் நாம் இம்மண்ணில் வாழ்வதே இயலாது என்று நம் அனைவருக்குமே தெரியும். மன்னிக்கும் இறைவனின் உண்மை மக்களாக நாம் வாழவேண்டுமானால், நாமும் அவரது சாயலை தாங்கியவர்களாக, மன்னிக்க வேண்டும்.
நாம் மன்னிக்க மறுக்கும் போது நமது உண்மை அடையாளத்தை உணர மறக்கின்றோம், மறுக்கின்றோம். மன்னிக்கப்பட்டவர்களாய் மன்னிக்க முன்வரும் போதே மன்னிக்கும் இறைவனின் மக்களாகின்றோம். ஏதோ ஒரு சில முறைகள் அல்ல, தெரிந்த முகங்களை மட்டுமல்ல, எல்லா முறைகளும், எல்லா மனிதர்களையும், எல்லா சூழல்களிலும் மன்னிக்க முன்வருவதே இறைமக்கள் பண்பு.
இன்று நம்மை சுற்றி பழிக்கூறுவோரும், பழித்துரைப்போரும், பிழைக்காண்போரும் அதிகரித்துவரும் நிலையிலே, நமது நிலைப்பாடு என்னவாக இருக்கப்போகிறது என்று நாம் சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். பாடம் கற்பிக்க துடிக்கின்றோமா? பழி வாங்க நினைக்கின்றோமா? அவர்கள் அழிவதை காண உளமார ஆசிக்கின்றோமா? கடவுளின் மக்கள் என்றால், அவர்களை மன்னிப்போம், அவர்களுக்காக செபிப்போம்... இதுவே கடவுளின் சாயல்!
இன்று நாம் தியானிக்கும் உவமையில் வரும் மனிதன் தன் தலைவன் முன்னிலையில் வாழும் தகுதியை கூட இழந்துவிடுகிறான், இருட்டறைக்கு தள்ளப்படுகின்றான். இறைவனின் முன்னிலையில் வாழக்கூடியவராய், அவரோடே அவரைப்போன்றே வாழப் பயில்வோம்!