புனித மத்தியாஸ் திருத்தூதர் விழா
தி.ப. 1: 15-17, 20-26; யோ 15: 16
உண்மை உறவுகள் தேர்ந்துகொள்ளப்படுகின்றன, திணிக்கப்படுவதில்லை. ஒருவரோடு உறவுகொள்ள நான் எண்ணும் போது, அவரோடு உறவுகொள்ள நான் முடிவெடுக்கிறேன், அதை தேர்ந்துகொள்கிறேன் அதை வெளிப்படுத்துகிறேன்... அதோடு எனது பங்கு முடிந்துவிடுகின்றது... என்னோடு உறவுகொள்வதா வேண்டாமா என்று அடுத்தவர் தான் முடிவு செய்ய வேண்டும். இப்படி பிறப்பதே உண்மையான உறவு, பொருளுள்ள உறவு, முதிர்ச்சிபெற்ற உறவு. கட்டாயத்தின் பேரிலும், நிபந்தனைகளின் பேரிலும் திணிக்கபடுபவை அல்ல. இறைவனோடு நமக்குள்ள உறவும் இப்படிப்பட்டதே... நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர் நம்மை அன்பு செய்கிறார், தேர்ந்துகொண்டுள்ளார்... அதற்கு பதிலளிப்பதோ அதற்கேற்றாற்போல் வாழ்வதோ நமது முடிவாகும்.
நீங்கள் என்னை தேர்ந்துகொள்ளவில்லை நான் தான் உங்களை தேர்ந்துகொண்டேன், என்று திட்டவட்டமாய் அறிவிக்கின்றார் கிறிஸ்து. இன்றைய முதல் வாசகத்தில் அதற்கான அழகான உதாரணமும் நம் முன் நிற்கின்றது. பதினொருவரோடு ஒருவரை சேர்க்க எண்ணியபோது, யாரை சேர்க்க வேண்டும் என இறைவனிடமே கேட்டு முடிவெடுக்கின்றார்கள். இறைவன் நம்மை தேர்ந்துகொள்ளும்போது பெரும் திரளாய், வெறும் கூட்டமாய் தேர்ந்துகொள்வதில்லை... மாறாக... நம்மை பெயர்சொல்லி அழைக்கிறார், நம்மை முழுமையாய் அறிந்து தேர்ந்துகொள்கிறார். நிறைகுறைகள் நம்மை அவருக்குரியவர்களாய் மாற்றுவதில்லை, அவர் என்னை தேர்ந்துகொண்டிருக்கிறார் என்ற தெளிவே நம்மை அவருக்குரியவராய் மாற்றுகிறது.
தேர்ந்துகொள்ளப்படுவது என்பது பெருமையல்ல, அது ஒரு சவால், ஒரு பணி, ஒரு கடமை, ஒரு அழைப்பு. தேர்ந்துக்கொள்ளப்பட்ட மக்கள் என்ற நிலையில் இருந்த இஸ்ராயேல் மக்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட சவாலுக்கும், பணிக்கும், தியாகங்களுக்கும், கீழ்படிதலுக்கும் ஏற்றவர்களாக வாழ முன்வரவில்லை - இன்று கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருக்கும் நாம் ஒவ்வொருவரும், உண்மையிலேயே தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாய் வாழ்வது என்பது நமது அழைப்பு, கடமை, தியாகம், சவால் என்பதை உணர்ந்திருக்கிறோமா?
நானே உன்னை தேர்ந்துகொண்டேன் என்று நம்மை பார்த்து கூறும் இறைவனின் அழைப்பை உளமார ஏற்க நாம் தயாரா?