Monday, June 11, 2018

ஜூன் 12: ஒளியாய் கொடுத்திட...

தியாக தீபங்கள் அணையா விளக்குகள் 

1அரசர் 17: 7-16; மத் 5: 13-16

நாம் ஒளி கொடுக்க மட்டுமல்ல, ஒளியை போலவே கொடுத்திட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை விளக்குகிறது இன்றைய இறைவார்த்தை. கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை என்பது நாம் அறிந்ததே, வாழ்வில் உணர்ந்ததே. ஆனால் கொடுப்பது அனைத்துமே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கொடுத்தலுக்கு இணையாவதில்லை. இன்றைய முதல் வாசகத்தில் ஒரு கைம்பெண்ணை சந்திக்கின்றோம்... அவர் கொடுத்தார். தன்னிடம் உள்ளவற்றிலிருந்து மட்டுமல்ல, தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தார்! இருந்தது சிறிதே ஆயினும் உள்ளது அனைத்தையும் கொடுத்தார். அதனால் தான் அவரிடம் இருந்தது தீரவே இல்லை... தியாக தீபங்கள் அனைவதில்லையல்லவா! 

கிறிஸ்து உள்ளவற்றிலிருந்து கொடுத்தல், உள்ள அனைத்தையும் கொடுத்தல் எனும் இவற்றை தாண்டியதொரு கொடுத்தலை குறித்து நம்மிடம் பேசுகிறார்... அதற்கு அழகானதொரு குறியீடையும் நமக்கு தருகிறார் - ஒளி! உலகிற்கு ஒளி நீங்கள்... ஒளியாய் கொடுத்திடுங்கள். ஒளி தன்னிடம் உள்ளதிலிருந்தோ, யாருக்கு தருகிறோம் என்று தரம்பிரித்தோ, தருவது சரியா இல்லையா என்று சீர்த்தூக்கியோ தருவதில்லை. தான் அணையும் வரை தருகிறது, உள்ள அனைவருக்கும் தருகிறது, எதையும் எதிர்பாராது தருகிறது. 

உள்ளவற்றிலிருந்து மட்டுமல்ல, உள்ள அனைத்தையும் மட்டுமல்ல, உங்களையே கொடுத்திடுங்கள், இறைவனுக்காய், இறை சித்தத்திற்காய் உங்களையே கொடுத்திடுங்கள்... ஒளியாய் கொடுத்திடுங்கள். தியாக தீபங்களாய், அணையா விளக்குகளாய் என்றென்றைக்கும் சுடர்விடுங்கள்!

The unspent jar and the unquenchable light

Tuesday, 10th week in Ordinary Time

1 Kgs 17: 7-16; Mt 5: 13-16

In the Word Today we hear an episode so interesting and fabulous...the jar that would never be spent! That was because the widow was ready to give even the little she had, knowing well what it would cost her and her little son. She gave and she was blessed. She gave not merely from what she had, but all that she had, even the little that she had - does it ring a bell and remind you of another widow, who too gave all of the little that she had and was noticed by Jesus, in the Gospels? Yes, Jesus wanted to draw a loud parallel between the two to ensure that the disciples understood that suck kind of persons do continue to exist and continue to challenge us!

Jesus teaches us today, of another type of giving... giving not merely from what we have and not even giving all that we have, but giving what we are! He uses the imagery of light to impress this spirituality on to our hearts. We are called to be light and to share that light with the world. We are called to shine, to enlighten the lives of people, to show them the path to the Lord... to be light in all ways possible. 



Being light and sharing that light is not merely giving of what we have and being done with it - it is giving others, giving the world, giving everyone regardless of who they are, giving all of them from what we ARE. 

Our light should shine for others, not for ourselves. It should shine certainly not to showcase our own greatness and so called achievements! Let us remember - when it shines for others, it will never be quenched, just like that jar that would never be spent!