Sunday, April 22, 2018

Can there be discrimination in the Church?

Ways to belong to the Flock: Accepting Everyone

Monday, 4th week in Eastertide
23rd April, 2018: Acts 11: 1-8; Jn 10: 11-18

The Son of God decided that he will lay his life down for us, for the entire humanity, for every one whom God has created in God's own image and likeness! 

We have just celebrated the Shepherd Sunday: and this week the Word begins to speak to us of the Ways to belong to that Flock, to God's flock. And the first of it is to accept everyone, absolutely everyone, without discrimination!

Can anyone segregate some, on the basis of whatever be the reason, and speak in terms of one being excluded from God's purview, or in terms of being more acceptable or less acceptable in the eyes of God than the others...who can hinder God from loving God's own children and from showing them God's mercy? 

Any logic of seclusion, segregation, stratification...think of them in our context: churches closed in the name of caste, churches divided in the name of language, churches still working on the logic of rich and poor, haves and have nots, powerful and the ordinary...can these define the flock of the Lord?

There is nothing that can hinder us from belonging to the flock of the Lord...there is nothing that can hinder God showering God's love an care on us - only one thing can hinder us: our choices, our personal choices for or against God and belonging to God. Condemnation, Discrimination, Condescension - are all mindsets that are un-Christian. Obedience, Surrender and loving submission to God are traits of a child of God! 

ஏப்ரல் 23: அவரது மக்களாக சில வழிகள்

1. அனைவரையும் ஒன்றென கருதுங்கள் 

நமக்காக தன்  உயிரையே தர முன்வந்தார் இறைமகன்: யாருக்காக? நமக்காக... ஒருசிலருக்காக அல்ல... நம் அனைவருக்காக. 

இறைவனை நல்லாயனாய் கொண்டாடிய ஞாயிறை தொடர்ந்து வரும் இந்த வாரத்திலே... இந்த ஒரே ஆயனின் மந்தைகளாக, ஒரே இறைவனின் மக்களாக நமக்கு ஒரு சில நிபந்தனைகளை முன் வைக்கிறது இறைவார்த்தை... நம் அனைவருக்காக இறைமகன் மரித்தார் என்பதை நாம் முதலில் ஏற்க வேண்டும்... ஏற்றுவிட்டோமே என்று நினைக்காதீர்கள்...

எல்லா இறைசமூகங்களும் ஏற்று விட்டனவா? இறைவனின் மகன் மகள் என பெயர் கூறி கொள்ளும் அனைவரும் ஏற்றுவிட்டோமா? சாதியின் பெயரால் மூடி கிடக்கும் ஆலயங்கள், மொழியின் பெயரால் பிரிந்து கிடக்கும் இறைசமூகங்கள், இன்னும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடுகளோடே  சென்றுகொண்டிருக்கும் பங்குகள், பணம்பெற்றவர்கள் இல்லாதவர்கள், பதவியில் இருப்பவர்கள் சாதாரணமானவர்கள், பெரும் புள்ளிகள் சாமானியர்கள்... என்றெல்லாம் நமக்குள்ளே இன்னும் எண்ணங்கள் இருக்கின்றனவா இல்லையா? 

அவ்வாறு இருந்தால் நாம் இன்னும் அந்த ஒரே ஆயனின் மந்தையாக மாறவில்லை என்று பொருள்... ஒரே இறைவனின் மக்களாக நாம் மாறவேண்டும் என்றால், அனைவரையும் ஒன்றென கருதும் மனப்பான்மை நம்மில் வளரவேண்டும். 

அனைவரையும் சகோதர சகோதரிகளாக காணாத ஒருவர், ஒரே தந்தையும் தாயுமான இறைவனின் மகனாய் மகளாய் மாற முடியாது... நிறை வாழ்வு பெற இயலாது... நாம் நிறைவாழ்வு பெறவே கிறிஸ்து வந்தார் என்பதை உணர்வோம், அனைவரையும் ஒன்றென ஏற்போம்.