தூயவராம் இறைவனின் தூய இறைகுலமாய்...
உங்களை படைத்த இறைவனாம் கடவுள் தூயவராய் இருப்பது போல், நீங்களும் தூயோராய் இருங்கள் என்று அறிவுறுத்திய போதே அந்த தூய்மைக்கான வழியையும் இறைவனே சுட்டிக்காட்டுவதை நாம் காண்கிறோம். சற்றே உற்று கவனியுங்கள் - கொடுக்கப்படும் அனைத்து அறிவுரையும் தன்னோடும், அடுத்தவரோடும், இறைவனோடும் உள்ள உறவை முன்னிறுத்தியே இருப்பதை நாம் மனதில் நிறுத்துவோம். உறவுகளில் உண்மையும், வார்த்தையில் வாய்மையும், சிந்தனைகளில் செம்மையும், செயல்பாடுகளில் நேர்மையும், மனதில் தூய்மையும், அன்றாட வாழ்வில் அன்பும் மட்டுமே இறைமக்களாகும் வழி என்பதை இறைவார்த்தை நமக்கு எடுத்து கூறுகிறது.
கிறிஸ்துவின் வார்த்தைகளிலும் இன்று நாம் வாழ வேண்டிய முறையை நாம் கேட்டறிகிறோம். இதுவும் உறவுகளையே முன்னிறுத்துகிறது. வரலாற்றின் ஏதோ ஒரு காலகட்டத்தில் தூய்மை என்பது அவரவரது தனிப்பட்ட வாழ்க்கை எனவும், இறைவனுக்கும் எனக்கும் இடையே மட்டுமே இருக்கின்ற மறையுண்மை எனவும் புரிந்துகொள்ளப்பட்டது. இதுவே இன்றும் கூட அன்றாட வாழ்வுக்கும், ஆன்மிக வாழ்வுக்கும் பெரியதொரு இடைவெளியை ஏற்படுத்திவிட்டிருக்கிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் நமக்கு விடுக்கும் அழைப்பும் இதை நோக்கியே அமைந்துள்ளது - அன்பு தணிந்து போவதே மனிதத்திற்கு ஏற்படும் பெரும் இழப்பு என்று நமக்கு நினைவூட்டுகிறார்.
நம் சிந்தனையிலும், சொல்லிலும், செயல்பாடுகளிலும், திட்டங்களிலும் அன்றாட அனுபவங்களில், அன்பு தணியாமல் காப்பதே தூய்மையில் வளரும் வழியாகும். இத்தவக்காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு புனிதச்செயலும் அன்பை வளர்க்கும், அன்பை ஆழப்படுத்தும் வகையில் அமையச்செய்வோம்.
அன்பு செய்வோம், தூயோராவோம்!