இன்று இறையாட்சிக்கான எனது பங்கை செய்துவிட்டேனா?
ஆட்சியில் அமரவிருக்கும் தன் மகன் சாலமோனுக்கு தனது இறுதி அறிவுரையை வழங்குகிறார் தாவீது. அவ்வாறே தனது தூதர்களாய் செல்லவிருக்கும் தன் அப்போஸ்தலர்களுக்கு தனது அறிவுரையை வழங்குகிறார் இயேசு கிறிஸ்து. இந்த இரண்டு அறிவுரைகளிலும் ஒரு ஆழமான கருத்து இழையோடுவதை நாம் கவனிக்க வேண்டும்.
இவ்விரு அறிவுரைகளில் மட்டுமல்ல இறைவார்த்தை முழுவதிலும், மனுவுருவான இறைவார்த்தையாம் கிறிஸ்துவின் வாழ்விலும் இதே அறிவுரை தான் விஞ்சி நிற்கின்றது: எல்லாவற்றிற்கும் மேல் இறையாட்சியை நாடுங்கள், மற்றனைத்தும் உங்களுக்கு சேர்த்து கொடுக்கப்படும் (மத் 6:33), என்பதே அது.
அப்போஸ்தலர்களும், முதல் கிறிஸ்துவ சமூகமும், தொடக்க கால இறையூழியர்களும் இதையே தங்கள் உயிர் மூச்சாய் கருதினர். தங்கள் உடல் நலமோ, சுக வாழ்க்கையோ, இன்பமோ துன்பமோ, ஏன் உயிரும் கூட அவர்களுக்கு பெரிதாக தோன்றவில்லை. இறையாட்சி மண்ணில் மலர வேண்டும் என்ற ஒரே எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருந்தது.
சாலமோனும் கூட தனது தந்தையின் மகிமையிலிருந்து விழ நேர்ந்தது அவர் இறைவன் அமைத்த ஆட்சி என்ற எண்ணத்தை மறந்தபோது தான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். நாம் இறையாட்சி என்ற ஒரு புள்ளியை மறந்துவிட்டோம் என்றால் நாம் செய்யும் அதிமிக பெரிய பணிகள் கூட அதன் உண்மை பொருளை இழந்து விடும். நமது பெருமைக்காகவும், நமது சிறு ஆதிக்க வட்டாரங்களை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாகவும், நமது சிறு அரசுகளை கட்டி எழுப்பும் செயல்பாடுகளாகவும் மாறிவிடும். இறையாட்சியின் மீது நமது கண்களை பதியவைத்து நாம் சின்னஞ்சிறு செயல்கள் செய்தாலும் அது இறைவனின் முன்னிலையில் மாபெரும் சாட்சியமாய் உருவெடுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இறையாட்சிக்கான நமது முன்னெடுப்பை உறுதி செய்வோம். நீதியின் அரசை, அன்பின் அரசை, சகோதரத்துவத்தின் அரசை, இறைவனின் அரசை இம்மண்ணில் நிறுவிட நம் அன்றாட வாழ்வில் சிறு சிறு செயல்களை இறையாட்சியின் மனநிலையோடு செய்வோம். ஒவ்வொரு நாளும், நாம் ஒவ்வொருவரும் இறையாட்சியின் பணியாளர்கள் என்பதை மறவாது வாழ்வோம்.
அனுதினமும் இந்த கேள்வியை நமக்குள்ளே எழுப்பிக்கொள்வோம்: இன்று இறையாட்சிக்கான எனது பணியை நான் செய்துவிட்டேனா?