இறைவார்த்தை, இறைப்பணி, இறைச்சமூகம்
விண்ணிலிருந்து ஒரு குரல் அவரை தொட்டது; இறைவனின் ஊழியர் அவரை குணப்படுத்தினார்; விண்ணிலிருந்து உணவு அவரை வலுப்படுத்தியது. இறையரசின் முழுச்சாயலையும் இங்கு நாம் காண்கின்றோம்!
கிறிஸ்துவின் வாழ்வின் முழு பொருளும் இறையரசை நோக்கியே இருந்தது. இறையரசு மண்ணிலே நிறுவப்பட வேண்டும் என்றே அவர் அல்லும் பகலும் விரும்பினார், இன்னலுற்றார், தன் வாழ்வையே தந்தார். இந்த இறையரசு மண்ணில் வர மூன்று கூறுகள் இணைய வேண்டியுள்ளது...அவற்றையே இன்று நாம் காண்கின்றோம்...
மேலிருந்து நம் உள்ளங்களில் ஒலிக்கும் இறைவார்த்தை... ஒவ்வொரு நாளும் இதற்கு நாம் செவிமடுக்க அழைக்கப்படுகிறோம். செவிமடுக்கவும், அதன் படி வாழ்வை மாற்றவும்.
உடன் வாழும் இறைச்சமூகத்தில் இறைவனின் இருத்தலை உணர அழைக்கப்படுகிறோம்... நானும் இறைவனும் மட்டும் என்று வாழ்ந்தால் அது உண்மையிலேயே கிறிஸ்து கண்ட கணவாகாது. அடுத்தவரை நாம் தொல்லையாக நினைக்கலாம்... அவ்வாறே அனானியா சவுலை நினைத்தார்...ஆனால் இறைவன் செய்த பெரும் காரியங்கள் நமக்கு தெரியும் அல்லவா?
அருளடையாளங்கள், வழிபாடுகள், சிறப்பாக நற்கருணையால் ஊட்டம்பெற்றவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம்.
இம்மூன்றும் இணையும் போது... அது இறையரசின் சாயலல்லாமல் வேறென்ன?