Thursday, January 25, 2018

சனவரி 26: விதையும் அதன் பலனும்...

திமோத்தேயுவும் தீத்துவும் தரும் பாடம் 

திமோத்தேயுவும் தீத்துவும் இன்று நமக்கு மாதிரிகளாய் தரப்படுகின்றார்கள்... இருவரும் அப்போஸ்தலராம் பவுலடிகளாரின் சீடர்கள். தன் வார்த்தையை கேட்பவர்களையும் தன் வாழ்க்கையை காண்பவர்களையும் இறையேசுவுக்காக வென்றெடுப்பதில் தூய பவுல் அடிகளாருக்கு இணை அவர் மட்டுமே. இறையாட்சி மண்ணில் மலர இவ்வப்போஸ்தலர்களும் சீடர்களும் தங்கள் வாழ்க்கையை எந்த அளவுக்கு தியாகம் செய்தார்கள் என்று சிந்திக்க அழைக்கும் அதே நேரத்தில் இன்றைய வாசகங்கள் நமக்கும் அதே அழைப்பு தரப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள நம்மை அழைக்கின்றன. 

கொடையாய் நமக்கு தரப்பட்டுள்ள கிறிஸ்தவ நம்பிக்கையை குறித்து எவ்வளவு அழகாக பவுலடிகளார் திமோத்தேயுவுக்கு எழுதுகிறார் என்று இன்றைய முதல் வாசகத்தில் காணுங்கள். விதையாய் நம் மனதில் தூவப்பட்டுள்ள இந்நம்பிக்கையை காத்து வாழ்வது, அதை அடுத்தவரோடு பகிர்ந்து கொண்டாடுவது என்ற நமது அழைப்பை நாம் உணர்ந்திருக்கின்றோமா?

நம் உள்ளத்தில் தரப்பட்டிருக்கும் இந்த கொடையாம் நம்பிக்கை இறையாட்சி என்னும் பயிராய் முளைக்க வேண்டும், பலன் தரவேண்டும் என்பது இறையழைப்பு. ஆனால் அதை வளரச்செய்வது நமது கையில் இல்லை...அது இறைவன் தரும் கொடையாகும். பொறுமையிழக்காமல், ஆர்வமிழக்காமல், கவனம் சிதறாமல் விதைக்கப்பட்ட விதையை (நம்பிக்கை) பாதுகாப்பது நம் பொறுப்பு, அதை பலனளிக்க செய்து பயிராக (இறையாட்சியாக) உருமாற்றுவது இறைவனின் பொறுப்பு - இதை உணர்ந்து வாழ்வதே கிறிஸ்தவ அழைப்பு. 

சோதனைகள் எதிர்ப்புக்கள் சவால்கள் மத்தியில் கிறிஸ்தவ மதிப்பீடுகளை இழக்காமல் வாழ்வதே நம் நம்பிக்கையை காப்பது என்று பொருள்படும். இது நம்மால் முடியும் ஏனெனில் ஆற்றலின் ஆவியை, அன்பின் ஆவியை, சுய கட்டுப்பாட்டின் ஆவியை இறைவன் நமது உள்ளத்தில் பொழிந்துள்ளார். திமோத்தேயுவை போல தீத்துவை  போல பவுலடிகளாரின் பாதையில் இறைவார்த்தையின் மக்களாய் நம்பிக்கையில் நம் வாழ்வை ஊன்ற செய்வோம், இறையாட்சியின் அறுவடையை பலுகச் செய்வோம்.

THE SEED AND THE FRUIT

THE WORD AND THE SAINTS

26th January: Remembering Sts. Timothy and Titus
2 Tim 1: 1-8; Mk 4: 26-34 


Timothy and Titus are two models we are presented with today.  They were both finds of the Apostle Paul on his journeys. Inspiring the listeners to make a life choice is a special gift that some are given with. St. Paul possessed this and used it well for the Reign of God. Timothy and Titus join the great band of apostles that Jesus initiated. 

How beautifully Paul speaks of faith in the first reading of today (we have chosen the one from the letter to Timothy)...as something that is gifted, something that has to be nurtured and something that has to be handed over and celebrated! 

Faith is a gift from God, as life and growth are. Just like the sower sows and waits for the grains to sprout, so do we sow all the goodness that we can and wait for the life and growth that God alone gives. We cannot be impatient and agitated to see their fruits, fruits will appear in God's own time, for it is the Lord who is at work!

Our faith has been sown in the ground of our hearts, it has to grow into the Reign of God on earth. Our responsibility is to nurture the seed (the faith) and await the fruit (Reign). It is not within our capacity to establish the Reign where we are, but it is within our capacity to live our faith to the full, because we are given a Spirit of power, love and self control! When we live it, the Reign will sprout!

The call the establish the Reign, however remains open and obligatory even today. Because, the Reign is yet to be made visibly present in the world. Every baptised person is entrusted with the task of establishing the Reign of God and what is your response? Do examples such as Timothy's and Titus' impel us towards action?

NOVENA TO THE FEAST OF ST. JOHN BOSCO - DAY 5

26th January, 2018: Don Bosco - A Spiritual Father


Our Challenge: That we understand our Catholic Spirituality and follow it in its depth. 

Our Prayer:

Lord God, thank you for Don Bosco, a man who promoted reverence to the Blessed Sacrament, love for Blessed Mother and loyalty to the Holy Father. He was a Spiritual Father to hundreds of youth and continues to be the same for millions of them today. Make us grateful for the Catholic faith we have and help us deepen our understanding and appreciation for it. We make this prayer through Christ our Lord.