Sunday, April 15, 2018

To See and Side the right Priorities!

Monday, 3rd week in Eastertide

16th April, 2018: Acts 6:8-15; Jn 6: 22-29

His face shone like an angel. But they decided to kill him all the same! They saw the great works and words that Jesus had but they ran after him only for the food they could get. At times we kill the things that pertain to God not only by being against them but by even not being attentive to the true spirit of it.

It is easier to ward off dangers from the quarters that are known to be contrary to us. But the more dangerous ones are those that seem to take a neutral stand within us and amidst us,  they can be real spirit dampeners and blind leaders.

First of all the call today is to make it clear to the world what my priority is! In order that I do it, I should know it first - what are those things on which I act? What are those things that really matter to me? What are those criteria or events that move me to action immediately... are they pertaining to my own good or to the common good or to Truth! Once I am clear of the priority I have, I need to see how close to or how far from God it is! If God and God's word is my priority, there could be nothing better than that!

The Second call  that I have is, to be alert to people  and their priorities, so that we do not side the wrong faction! Here is where we need to have the clarity to know the priority of people - appreciate it when right and denounce it when wrong! Fearlessly! Because we see the heavens open and the Son of God seated at the right hand of the Father!

ஏப்ரல் 16: உன் முக்கியத்துவங்கள் என்ன?

எதை நீ முன்னிறுத்துகிறாய் - உலகம் உன்னை கேட்கிறது!


ஸ்தேவானின் முகம் ஒளிர்வதை அவர்கள் கண்டார்கள்... எனினும் அவரை கொன்றார்கள். கிறிஸ்து செய்த அனைத்து புதுமைகளையும் அவர்கள் கண்டார்கள், எனினும் அவர் தந்த வெறும் உணவுக்காக அவரை பின்தொடர்ந்தார்கள்! எதிர்த்து நிற்பதாலோ, நிராகரிப்பதாலோ மட்டுமல்ல சரியான முக்கியத்துவத்தை தராமலிருப்பதாலும் இறைவனை விட்டு நாம் அகன்று போகலாம். எதிர்த்து நிற்பது என்பதோ, நிராகரிப்பது என்பதோ தெளிவான ஒரு நிலைப்பாடாகும்; ஆனால் உடனிருப்பது போன்றே இருப்பதும் அதே சமயம், உரிய இடத்தையும் முக்கியத்துவத்தையும் தராமலிருப்பதும் நமது வாழ்க்கையின் தரத்தையே குறைத்துவிடுகிறது. 

இறைவனின் பிள்ளைகள், கடவுளின் மக்கள் என்றால், நமது வாழ்வில் எது முக்கியத்துவம் பெறுகிறது என்று இந்த உலகிற்கு நாம்  தெளிவாக எடுத்து சொல்லியாக வேண்டும். உலகிற்கு எடுத்து சொல்லவேண்டுமென்றால், அது எனக்கு தெரிந்திருக்கவேண்டும். உண்மையிலேயே என் வாழ்வின் முக்கியத்துவம் என்ன? எதை நான் முதன்மை படுத்துகிறேன்? எது எனது கவனத்தையும் நேரத்தையும் அதிகம் எடுத்துக்கொள்கிறது...என்று நான் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. 

இறைவனையும் இறைவனுக்கு உரியதையும் நான் முன்னிறுத்தும் போது, எனது வாழ்வும் ஒளிர்கின்றது, அதை உலகும் காண்கின்றது. காண்பதனால் மட்டுமே அதை உலகு ஏற்கப்போவதும் இல்லை, என்னை கொண்டாடப்போவதும் இல்லை... எனினும் என் நிலைப்பாடுகள் மாறாமலிருக்கவேண்டும்... அப்படி இருப்பின், நானும் விண்ணகம் திறந்திருப்பதையும், மனுமகன் தந்தையின் வலப்பக்கம் விற்றிருப்பதையும் காண்பேன்!