தனி மனித சுதந்திரம் என்னும் அரிய கொடை
என் சிந்தனைகள், என் சொற்கள், என் செயல்களுக்கு நான் யாரையும் பொறுப்பாக்க முடியாது. பல வேளைகளில் நாம் சொல்லும் ஒரு சொல்லுக்கோ, நாம் செய்யும் ஒரு செயலுக்கோ வேறு யாரவது ஒருவரை அல்லது வேறு ஏதாவது ஒரு சூழலை பொறுப்பாக்கிவிட்டு தப்பிக்க நாம் நினைப்பதுண்டு. அது நம் தனி மனித சுதந்திரம் என்னும் கொடையை வீணாக்கும் ஒரு மனநிலை என்று இன்றைய வார்த்தை குறிப்பிடுகிறது.
இதை மனதில் நிறுத்தியே கிறிஸ்து இம்மண்ணில் உங்களுக்கு தந்தையாக யாரையும் கொள்ளாதீர்கள் என்று கூறுகிறார். எபிரேய பண்பாட்டிலே தந்தை என்பவர் தான் அனைத்தையுமே எனக்கு முடிவு செய்வார். நான் என்ன செய்ய வேண்டும் எதை தேர்ந்துகொள்ளவேண்டும் என்று அனைத்தையும் முடிவு செய்வது தந்தையே! இவ்வுலகில் யாரையும் உங்களுக்கு தந்தை என்று அழைக்காதீர்கள் என்று கூறுவதன் பொருள் இதுவே: உங்கள் முடிவுகள் உங்களுடையதாய் இருக்கட்டும் என்பதே!
தனி மனித சுதந்திரம் என்பது இறைவன் நமக்கு அளித்துள்ள மாபெரும் கொடையாகும். நன்மையானவற்றை நாமாக எந்த வற்புறுத்தலும் இன்றி தேர்ந்துகொள்வதே தனிமனித சுதந்திரமாகும். சில நேரங்களில் இதுவே நாம் தவறானவற்றை தெரிந்துகொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பதும் உண்மையே! இதையே நாம் தவறு என்றும் பாவம் என்றும் கூறுகிறோம். தவறான தேர்வை உணர்ந்து அதை திருத்திக்கொள்ளும் போது நாம் வளர்கிறோம், ஆளுமை பெறுகிறோம்! இதையே இறைவன் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார்.

நாம் தனிமனித சுதந்திரத்தோடு நன்மையை தேர்ந்துகொள்ளவேண்டும், தீமையை விளக்கவேண்டும், தவறி அதில் விழுந்துவிட்டால் விரைவில் எழுந்து விலகவேண்டும் என்று அழைக்கிறார். தவக்காலம் என்பது இந்த வாழ்முறையை நமக்கு கற்பிக்கும் காலமாகும், உணர்ந்து இக்காலத்தை தொடர்ந்து வாழ்வோமா?