கடவுளில் வாழ்தல் என்பது ...
கடவுளில் வாழ்தல் என்பது வெறும் சொல்லிலும் செயலிலும் வாழ்வதல்ல . அது மனச்சான்றிற்கு உரிய உள்ளார்ந்த வாழ்வாகும். அனைத்தையும் கடந்து உள் நோக்கக்கூடிய 'கட வுள் ' மட்டுமே அறியக்கூடிய வாழ்வு அது. ஆகையால் தான் எல்லா சாட்சியங்களையும் விட மேலானதொரு சாட்சியம் மனச்சான்றின் சாட்சியமாகும்.வந்து பாருங்கள் என்று கிறிஸ்து கூறினார், அதையே தன் சீடர்களுக்கு சவாலாகவும் தந்தார். அதை ஏற்றுக்கொண்டு அவர்களும், நேற்று அந்திரேயாவும் இன்று பிலிப்பும் துணிச்சலோடு வந்து பாரும் என்று அடுத்தவருக்கு அழைப்பு விடுகின்றனர். நமது உள்ளார்ந்த வாழ்வை இவ்வுலகம் காணும்படி வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
துணிச்சலோடு இவ்வழைப்பை ஏற்றுக்கொண்டு, அடுத்தவரின் பாராட்டுக்காகவோ அவர்களின் நன்மதிப்புக்காகவோ அல்லது அவர்களது எதிர்ப்புக்கு பயந்தோ அல்லது வேறு விளைவுகளுக்கு அஞ்சியோ அல்ல உள்ளார்ந்த வாழ்வுக்கு உண்மையுள்ளவர்களாய் கடவுளின் எண்ணத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாய் வாழ முற்படுவோம்.
உள்ளார்ந்த வாழ்வே கடவுளில் வாழ்தல் என்பதை உலகறிய எடுத்துரைப்போம்.