Friday, April 27, 2018

Can the Church succumb to pressure?

Ways to belong to the flock: Possess Joy and the Holy Spirit

Saturday, 4th week in Eastertide
28th April, 2018: Acts 13: 44-52; Jn 14:7-14

The disciples were filled with joy and holy spirit, says the first reading today. It becomes hard to connect that this is the ending note of a passage speaking about the rejection and insult of the apostles by their own fellow Jews. Elsewhere too we would read that they returned happy that they were able to suffer for the sake of the name of  Jesus (cf. Acts 5:41). 

However it would make clear sense once we read and understand what Jesus tells us in the Gospel today: whoever believes in me will do the works that I do and will do greater ones than these. The apostles seem to have inherited it from their Master to consider themselves blessed for having to suffer for righteousness sake, to thirst for justice. Joy, for Jesus meant being in the Spirit and being in the Spirit meant standing by the Lord, with truth and dexterity!

It used to be my normal experience to be laughed at, when I speak to groups about standing for truth and facing the consequences. Be it groups of youngsters or groups of consecrated people, they smile when I say, 'stick to the truth and stand for the right wherever you are.' They would smile and conclude saying, 'then that would be the end of us"...meaning that they would lose any future if they did it! It would be like, they telling me: that sounds good when said, but living it is not feasible. I appreciate the honesty of these people, but constantly question myself: when will we be matured enough to shake the dust off our feet and walk, and keep walking!

ஏப்ரல் 28: அவரது மக்களாக சில வழிகள்

6. ஆவியில் மகிழ்ந்திருங்கள் 

சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள், என்று இன்றைய முதல் வாசகம் முடிகிறது. இந்த முடிவுக்கும், வாசகத்தில் நாம் படிப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல தோன்றும், ஏனெனில் வாசகம் முழுவதும் சீடர்கள் எவ்வாறு நிராகரிக்கப்பட்டார்கள் என்பதையே படிக்கிறோம்... ஆனால் அத்தனை புறக்கணிப்புக்களுக்கு பிறகும், அவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள் என்கிறது இறைவார்த்தை.  வேறொரு இடத்திலும் கூட, அவர்கள் கிறிஸ்துவுக்காக துன்புறுவதில் மகிழ்ச்சியுற்றார்கள் என்று நாம் படிக்கிறோம் (தி.ப. 5:41)

உண்மையில் இதற்கு பொருள் கொள்ள வேண்டுமென்றால்  இன்றைய நற்செய்தியில் கிறிஸ்து கூறுவதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்: என்னில் நம்பிக்கை கொள்பவன் என்னை காட்டிலும் அறிய செயல்கள் செய்வான்! தங்கள் குருவை முழுமையாய் பின்தொடரும் சீடர்களை நாம் இங்கு பார்க்கிறோம். அவரை போலவே, நீதிக்காக பசி தாகம் கொண்டவர்களாக வாழவும், உண்மைக்கு சான்று பகர்வதே தங்கள் அழைப்பு என்பதை உணரவும் அவர்கள் தங்கள் ஆசிரியராம் கிறிஸ்துவிடமிருந்தே கற்றுக்கொண்டார்கள். தங்கள் குரு கிறிஸ்துவை போன்றே அவர்கள் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்!

பலமுறை எனக்கு நிகழ்ந்த ஒரு அனுபவம் உண்டு - இளைஞர்களோடும் சரி, இளம் துறவிகளோடும் சரி... அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை குறித்து பேசும்போது "உண்மைக்காக நில்லுங்கள், அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க தயாராக இருங்கள்" என்று நான் கூறும்போதெல்லாம்  என்னை பார்த்து ஒரு சிறு புன்னகையோடு அவர்கள் கூறியதுண்டு: 'அதோடு எங்கள் கதை முடிந்துவிடும்' என்று. அவர்களது வெளிப்படையான கருத்தை நான் பாராட்டினாலும் எனக்குள்ளாக ஒரு கேள்வியை கேட்டுக்கொள்வேன்: கால்களில் உள்ள தூசியை தட்டிவிட்டு அடுத்த நல்ல காரியத்தை நோக்கி செல்லும் மாற்றம் நமக்குள் எப்போது வரப்போகிறது ?

ஏப்ரல் 27: அவரது மக்களாக சில வழிகள்

5. உள்ளம் கலங்காதீர்கள் 


அவரது மக்களாய் வாழ கிறிஸ்து கற்று தரும் அடுத்த வழி: நீங்கள் உள்ளம் கலங்காதீர்கள். 

கிறிஸ்துவே நமக்கு அளிக்கபட்ட வாக்கு, அவரே அதன் நிறைவு; அவரே வழி அவரே நாம் சென்றடைய வேண்டிய இலக்கு; அவரே உண்மை, அவரே வாழ்வின் உண்மையான பொருள். அவரை நாம் கொண்டிருக்கும்போது நமக்கேதும் குறையேது? அவரை நாம் கொண்டிராவிடில் நமக்கு நிறைவளிப்பது எது? குழப்பங்களும், சோதனைகளும் வரும்போது நாம் கலங்கினோம் என்றால், அவரது உடனிருப்பை நாம் மறக்கிறோம் என்று பொருள். எதை கண்டும் நான் அஞ்சிடேன் - ஏனெனில் உண்மையை நான் அறிவேன், உண்மை வழி என் கண் முன்னே உள்ளது, என் வாழ்வு என் கையில் உள்ளது, ஏனெனில் என் ஆண்டவர் என்னோடு உள்ளார்! 

எதை கண்டும் நான் அஞ்ச தேவை இல்லை, ஏனெனில் அவரறியாது எதுவும் நடப்பது இயலாது - என் ஆற்றலுக்கு மீறிய சோதனையும் என்னை அணுகாது. அவரில் நான் ஊன்றி வாழும்போது என் வாழ்வே அவருக்கு சான்றாகி மிளிர்கின்றது...சான்றாய் மாறாது வாழும் எந்த வாழ்வும் கிறிஸ்தவ வாழ்வாய் இராது. கலங்காதிருப்போம், அவர் மக்களாவோம், நம்மில் அவரை பூரிப்படைய செய்வோம்!

Can the Church be disturbed?

Ways to belong to the Flock: Let nothing disturb you!

Friday, 4th week in Eastertide
27th April, 2018: Acts 13: 26-33; Jn 14: 1-6

The fifth way to belong to the Lord's flock is to be aware of the presence of the Lord and not letting anything disturb us. Let nothing disturb you, says the Lord in the Gospel today and repeats the same in our personal lives. 

Jesus is the promise and the fulfilment, he is the way and the destiny, he is the truth and the true meaning of our life. When we have the Lord, we shall lack nothing; when we do not have him with us, nothing can complete us. At times when crises seem to surround us and situations threaten to overpower us, all that we need to do is - take a deep breath and say: I have the truth, I know the way, I have my life - because the Lord is with us!

Nothing can disturb us beyond a limit, if they do we are not sufficiently rooted in the Lord. When we are not sufficiently rooted in the Lord, we cannot be true witnesses to the Lord. If we cannot truly witness to the Lord, we share no goodnews to the world. When we share no goodnews to the world our Christian life is empty! How can we hear the Father say: You are my son, my daughter; today I have become your father and your mother?