நம் வாழ்வை புரிந்துகொள்ள ஒரு கண்ணோட்டம்!
நம் வாழ்வு, அதன் பொருள், நமது தேர்வுகள், நமது தெளிவுகள், நமது அழைப்பு, உண்மையான நமது கடமை... இப்படிஎல்லாம் சிந்தித்ததுண்டா? சிந்தித்து பாருங்கள். நானும் வாழ்ந்தேன் இருந்தேன் என்று இருப்பதற்காகவா இறைவன் நம் ஒவ்வொருவரையும் தனித்தன்மையோடு தனித்திறன்களோடு, இத்தனை பொருளோடு படைத்துள்ளார்? சரி தனித்தன்மைகள் திறமைகள் என நான் எனக்காக மட்டுமே வாழ்ந்து மரிக்கவா இத்தனை அழகான அர்த்தமுள்ள உறவுகளை கொடுத்துள்ளார்? துன்பங்கள் தொல்லைகள் என்று இருந்தாலும் வாழ்வில் ஒரு பொருளும், ஆழமும் இருக்கத்தானே செய்கிறது! அப்படியானால் இதை எப்படி புரிந்துக்கொள்வது...
அதற்க்கு தான் இன்றைய வார்த்தை மிக அழகானதொரு பதில் தருகின்றது. அந்த முதற்கிறிஸ்தவர்களை பாருங்கள்... ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாய் வாழ்ந்தார்கள் என்கிறது இறைவார்த்தை... உறவே நம் வாழ்வுக்கு உண்மை பொருளை தரக்கூடியது! உறவுகளே நம் வாழ்வை கிறிஸ்தவ வாழ்வாய் மாற்றக்கூடியது...
இதை நான் குறும்போதே... இந்த உறவுகளில் உள்ள சிக்கல்கள், பிரச்சனைகள், உரசல்கள் இவை யாவும் நமது மனக்கண்முன் வர நேரிடும்... இந்த உறவுகள் அல்லவா வாழ்க்கையை கடினமாக்கிவிடுகின்றன என்று நம்மக்கு தோன்றும். ஆனால்...இதை தான் கிறிஸ்து நமக்கு விளக்குகிறார்...இந்த உறவுகள், நம் வாழ்வு, நம் எண்ணங்கள், நமது கனவுகள்... இவை எல்லாமே எப்போது பொருள் பெரும் எனின், அவற்றை நாம் மேலிருந்து கண்டு பொருள் கொள்ளும்போது மட்டுமே!
மேலிருந்து கண்டு பொருள்கொள்ளுதல் என்பதே கிறிஸ்துவின் கண்ணோட்டம்... அதாவது இறைவன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று உணர்ந்து வாழ்வது. நம் வாழ்வை மேலிருந்து புரிந்துகொண்டோமென்றால், நம் உறவுகளை மேலிருந்து புரிந்து கொண்டோமென்றால், சுயநலம், தற்பெருமை, ஒடுக்குமுறை, சுரண்டல்கள், ஏய்ப்புக்கள், ஏமாற்றுக்கள், அநீதிகள், இவை எதுவும் இருக்காது. அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், தியாகம், ஒற்றுமை, இனிமை, மகிழ்ச்சி, பூரிப்பு... இவற்றை கேட்கும் போதே எவ்வளவு அழகாயுள்ளது... இதுவே மேலிருந்து கண்டு பொருள் கொண்டு வாழும் முறை... முயற்சிப்போமா? இதுவே இறையரசின் தொடக்கமும் கூட... சிந்தியுங்கள்...