ஏப்ரல் 6: பாஸ்கா எண்கிழமையில் வெள்ளி

அவர்களது நம்பிக்கை புதுமைகளோடும், அருங்குறிகளோடும் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவரால், உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப் பட்டிருந்தார்கள், அச்சத்தாலும் பயத்தாலும் அல்ல. அவர்களிடம் இருந்த பயமும் நடுக்கமும் காணாமற்போயிற்று! ஏனெனில் அவர்களை ஆண்டவர் ஆட்கொண்டிருந்தார். இது அந்த பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் புரியவில்லை. மற்ற கிளர்ச்சிவாதிகளை போல இவர்களும் அடங்கிவிடுவார்கள் என்று நினைத்தார்கள்...ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, இன்னும் அடங்கியப்பாடில்லை.
ஆம் அன்புக்குரியவர்களே... நாம் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட வேண்டும். உண்மைக்கும், நீதிக்கும், இறையரசிற்கும், மனித மாண்பிற்கும், சமத்துவத்திற்கு, உள்ளார்ந்த அமைதிக்கும் எதிராக உள்ள அனைத்து சக்திகளையும் எதிர்த்து நாம் கிளர்ந்தெழ வேண்டும், ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு. ஆண்டவரிலே இணைந்து இறையரசின் கனவுகளை நாம் நிகழ்வாக்க வேண்டும்.
உயிர்ப்பின் அழைப்பு இதுவே - உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப்படுவோம், அச்சத்தால் அல்ல!