இறைவனையும் இறையாட்சியையும் நெருங்க ஒரே வழி
உமது ஆட்சி வருக என்று நாம் செபிக்க கற்றுக்கொண்டுள்ளோம். அந்த ஆட்சி வர வேண்டுமென்றால் வெறும் ஆசையும் செபமும் போதாது, நம் வாழ்வு அதற்கேற்றாற்போல் மாற வேண்டும் என இன்று இறைவார்த்தை நம்மை அழைக்கின்றது. தன்னலத்திலும் சுகவிருப்பிலும் நெடுந்தூரம் தன்னையே இழந்து நிற்கின்ற மனிதத்தை பார்த்து இறைவன் இன்று, "திரும்பி வா" என்று அழைக்கிறார். ஆம்... திரும்பி வா! இறையாட்சியை நெருங்கி வா... அதற்கு ஒரே வழி தான் உண்டு.
உண்மையான உறவுகளை வளர்த்துக்கொள்... உனக்கு ஆதாயமான உறவுகள் அல்ல, உன் தேவைகளை நிறைவேற்றும் உறவுகள் அல்ல, உண்மையோடு பகிர்ந்துகொள்ளப்படும் உறவுகளை வளர்த்துக்கொள்.
உன்னையும் உனக்குள்ளது அனைத்தையும் படைத்தவரோடு உண்மையான உறவை வளர்த்துக்கொள். பூக்கள் தோறும் தேனை தேடும் வண்டு போல எல்லா இடத்திலும் தேடிவிட்டு வேறு வழியே இன்றி இறைவனை நாடும் அவலத்தை மேற்கொள்ளாதே! உண்மையான உறவு, நம்பிக்கையில் நிலைபெறும் உறவு, எதையும் எதிர்பார்க்காத உறவு ஒன்றை இறைவனோடு வளர்த்துக்கொள்.
உனக்கருகே உள்ளவர் உனக்காகவும் நீ பயன்படுத்திக்கொள்ளவும் இருக்கிறார் என்னும் தரம்கெட்ட புரிதல் இல்லாத ஒரு உறவை அடுத்திருப்பவரோடு வளர்த்துக்கொள். அடுத்திருப்பவரோடு உள்ள உறவு உனக்கான உறவு அல்ல, அவருக்கானது! பெற்றுக்கொள்ள அல்ல தரவேண்டியது!
அன்பு செய்யப்பட அல்ல, அன்பு செய்ய; ஏற்றுக்கொள்ளப்பட அல்ல, ஏற்றுக்கொள்ள; மன்னிக்கப்பட அல்ல மன்னிக்க; பெற அல்ல தர... இதுவே இறையாட்சிக்குரிய உறவு.
உண்மையான உறவுகளை வளர்த்துக்கொள்வோம், அது மட்டுமே இறையாட்சியையும் இறைவனையும் நெருங்கி வர வழி என்று உணர்வோம்!