கோட்டையும், கேடயமுமானவரே நம் வலிமை!
அத்தனை தோல்விகளுக்கு மத்தியிலும், ஆண்டவரின் பேழை அவர்கள் மத்தியில் வந்தபோது இஸ்ராயேல் மக்களின் ஆரவாரம் விண்ணை எட்டியது. காரணம், அவர்களுக்கு அவர்களின் உண்மையான ஆற்றல் எங்குள்ளது என்று தெளிவாக தெரிந்திருந்தது. வெற்றியோ தோல்வியோ, இறைவனின் மக்கள் என்ற உண்மையில்தான் அவர்களது முழு வலிமையையும் அடங்கியிருந்தது. கடவுளின் மக்கள் என்றால் கடவுளின் அன்பை பெற்றவர்கள்...அவரது சித்தப்படி எது நடந்தாலும் அது நன்மையாகவே அமையும் என்ற ஆழமான நம்பிக்கையே அந்த ஆற்றலின் ஊற்று .
உமக்கு சித்தமானால் என்னை குணப்படுத்தும், என்று கூறும் அந்த தொழுநோயாளருக்கும் இறைவனின் சித்தமே நமது ஆற்றல் என்பது தெரிந்திருந்தது. நாம் வாழ்வு பெற வேண்டும் அதை முழுமையாய் பெற வேண்டும் என்று விரும்பும் இறைவனே நமது கோட்டையும் கேடயமும் ஆவார்.
தோல்விகள் கண்டு துவண்டு போவதும், துன்பங்கள் கண்டு திணறி போவதும் இறைவனின் மக்களுக்கு உரிய வாழ்முறைகள் அல்ல. என்ன வந்தாலும் எது நடந்தாலும்... இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல...உண்மையாகவே என்ன வந்தாலும் எது நடந்தாலும் என் இறைவனின் சித்தத்தின் படி அது என் நன்மைக்கே என்று நம்பி பயணத்தை தொடர நம்மை அழைக்கிறது இன்றைய வார்த்தை.
மனம் முழுதும் எதிர்நோக்கோடு, கோட்டையும் கேடயமுமான அவரே என் வலிமை என்று வாழ்வோம் வாருங்கள்.
We need to rise from a style of life that is a mere damage-control, to a more proactive responsible living. When we realise the presence of God ever in our midst, we will live a life that is worthy of the Lord and the Lord's will; and that alone can keep us from becoming mere laughing stock among the people!
Let us live up to our call, our vocation - that of being sons and daughters of God.