Sunday, August 12, 2018

Magnificence: the God-perspective of our lives!

Monday, 19th week in Ordinary time

August 13, 2018: Ezek 1:2-5,24-28; Mt 17: 22-27

We belong to a God who is mighty, grandiose and magnificent. And because we belong to this God we too are mighty and magnificent. And this magnificence loses its true colour if it is detached from its origin, that is God. It dissipates into arrogance or pride and degrades humanity. As long as it is strongly linked to the Lord, it is ready to put up with sacrifices, sufferings, unjust treatments, and so on. 

As St. Paul would put it, "the sufferings of this present time are not worth comparing with the glory about to be revealed to us" (Rom 8:18). We will learn this only when we begin to see everything from the perspective of God and that is what Jesus teaches us in the Gospel. 

Jesus shows us an example of looking at everything in life, absolutely everything in life, from the perspective of God. Even a question of paying taxes leads Jesus to reflect on the fact that we are sons and daughters of God, that we are free by virtue of our participation in the Divine Nature of God! 

The capacity of Jesus to move from the ordinary things of the daily life to a reflection on our relationship with God, is something amazing and something that we need to practice ourselves too. Let us at the end of this day, look back and see how many God-talks we were inspired to, all along this day. That would be possible only if we decided to live our life conscious of our magnificence, that is the God-perspective of our lives!

மனிதமும் மாட்சியும்

ஆகஸ்ட் 13, 2018: எசேக் 1:2-5,24-28; மத் 17:22-27


இறைவனின் மாட்சிமை நம் கண்கொண்டு காண இயலாதது என்பதை எசேக்கியேல் அழகாய் விளக்குகிறார். அந்த இறைவனின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்ட நாமும் அதே மாட்சியை தங்கியவர்கள் என்பதை நாம் ஏன்  அவ்வப்போது மறந்துவிடுகிறோம்? இறைவனில் இணைந்து இருக்கும் வரை நமது மாட்சியும், உலகம் வியக்க மின்னுகிறது. ஆனால் இறைவனை விட்டு விலகி சிந்தித்தால் அதே மாட்சி, கர்வமாய், தற்புகழ்ச்சியாய், திமிராய், அரக்கத்தனமாய் அழிவுக்கு வழிவகுக்கிறது. இறைவனோடு இணைந்து உள்ளவரை இந்த மாட்சியே நம் அன்றாட வாழ்வின் துன்பங்களையும் துயரங்களையும் சோதனைகளையும் தாங்கிக்கொள்ளும் ஆற்றலை நமக்கு அளவில்லாது தருகிறது. 

நற்செய்தியிலே கிறிஸ்து இந்த மாட்சியை தக்கவைத்துக்கொள்ள ஒரு வழியை நமக்கு கற்பிக்கிறார். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் இறைவனின் கண்ணோட்டத்திலிருந்து காண கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் கிறிஸ்து. அது வெறும் வரி செலுத்தும் ஒரு செயலாக இருந்தாலும் அதை எப்படி இறைவனின் கண்ணோட்டத்தில் காண்பது என்பதை நமக்கு எடுத்துக்காட்டாய் வழங்குகிறார். 

வாழ்வின் சாதாரண நிகழ்வுகளையும் கூட இறைவனின் கண்ணோட்டத்தில் கண்டு புரிந்துகொள்ளும் தன்மையை நமக்குள்ளே வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யும் போது நன்மையோ தீமையோ, இன்பமோ துன்பமோ, வெற்றியோ தோல்வியோ, நிறைவோ குறைவோ எல்லாவற்றிலும் இறைவனின் மாட்சி மிளிர்வதை நம்மால் உணர முடியும், அதே மாட்சி மனிதர்களாகிய நம்மிடமும் இருப்பதை நம்மால் நம்ப முடியும். இறைவனின் கண்ணோட்டத்தில் வாழ்வை காண்போம், நமக்குள் குடியிருக்கும் இறைவனின் மாட்சியை கண்டுணர்வோம்!