உண்டாலும் குடித்தாலும் இறைவனின் மாட்சிக்கே செய்வோம்.
சமீபத்திலே சந்தித்த ஒரு நண்பரிடம், என்ன உடம்பு சற்றே பெருத்துவிட்டது என்று கூறியதும் அவர் என்னிடம்... இன்னும் ஓரிரு நாட்களில் தவக்காலம் தொடங்கிவிடும் அதன் பிறகு பாருங்கள், என்றார் புன்னகைத்துக்கொண்டே. இன்னொருவர்... இந்த தவக்காலம் என் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த எனக்கு உதவும்... உண்ணாநோன்பு என்ற பெயரில் இனிப்பு உண்பதை நான் தவிர்த்துவிடுவேன் என்றார். உண்மையிலேயே இவை நல்ல விளைவுகள் என்றாலும், நாம் உண்ணாநோன்பு இருப்பதன் உண்மையான காரணம் என்னவென்று சிந்தித்திருக்கின்றோமா? நாம் உண்ணாநோன்பு இருப்பதன் காரணம் என்ன?
ஒரு நாள் முழுவதும் உண்ணாமல் நோன்பு இருந்துவிட்டு, உடல் களைப்பிலும், மன அழுத்தத்தாலும் எரிச்சலடைந்து பார்ப்பவரை எல்லாம் கடிந்துக்கொண்டே இருந்தேன் என்றால் நான் நோன்பிருந்து என்ன பயன்? மூன்று நான்கு மணிநேரம் செபம் செய்துவிட்டு வெளிவரும்போதே இருக்கும் அனைவரோடும் சண்டையிட்டுக்கொண்டே வந்தேன் என்றால் நான் செபம் செய்து தான் என்ன பயன்? என்னால் முடிந்த ஒரு நற்காரியத்தை அடுத்தவருக்கு செய்துவிட்டு அது உலகம் முழுதும் அறிய தம்பட்டம் அடித்தேன் என்றால் நான் செய்த நன்மையால் என்ன பயன்?
உண்ணாநோன்பு என்பது எனது,"நான்' என்ற அகந்தையை நீரூற்றி வளர்ப்பது அன்று!
உண்ணாநோன்பு என்பது நான் அடுத்திருப்பவரை விட நல்லவன், இறைச்சிந்தனை மிக்கவன் என்று என்னையே உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அல்ல.
நான் ஏதோ இறைவனுக்கு பெரும் தியாகம் செய்வது போல உணர்வதும் உண்மையான உண்ணாநோன்பல்ல..
உண்ணாநோன்பு என்பது என் ஆசைகளிலிருந்தும், அடிமைத்தனங்களிலிருந்தும், என்னையே நான் விடுவித்துக்கொள்வதாகும். ஏதோ ஒரு சிறு விதத்திலே என்னையே இயேசுவின் பாடுகளோடு எந்த சத்தமோ ஆரவாரமோ இல்லாமல் இணைத்துக்கொள்வதாகும்.
தற்பெருமையையும் தீர்ப்பிடுதலையும் தாண்டி உண்மையான அமைதியையும், மனமகிழ்ச்சியையும் நோக்கிய அழைப்பு அது.
உண்டாலும் குடித்தாலும் இறைவனின் மாட்சிக்கே செய்திடுவோம் என்று கூறும் பவுலடிகளாரின் வார்த்தைகளுக்கேற்ப உண்ணாவிட்டாலும் குடிக்காவிட்டாலும் அதை இறைவனின் மாட்சிக்காகவே செய்வோம்.
இறைவனில் இணைந்திட, அடுத்தவரின் சுமை அறிந்திட உண்ணாநோன்பு நமக்கு உதவுவதாக!