Tuesday, January 2, 2018

சனவரி 3: அவரைப்போலவே

அவரைப்போலவே இருத்தல் என்பது...



அவரது தன்மையை கொண்டிருத்தல் - எதையும் எதிர்பாராது அன்பு செய்தல், குறைகளை தாண்டி குற்றங்களை மன்னித்தல், வேறுபாடுகள் பாராட்டாது ஏற்றுக்கொள்ளுதல், எந்த தயக்கமுமின்றி தாராளமாய் இருத்தல்... இவையே இறைத்தன்மையை கொண்டிருத்தல் என்று பொருள் படும். 

அவரது செயற்பாட்டினை கொண்டிருத்தல் 
அவரை போலவே சிந்திக்கும் மனம், அவரது வார்த்தைகளையே பேசும் குணம், அவரது செயல்களையே செய்யும் எண்ணம், சுருங்கக்கூறின், சிந்தனை சொல் செயல் அனைத்திலும் அவரை விட்டகலாமல் வாழும் வாழ்வு என்று பொருள் படும்.

அவரது மகனாய் மகளாய் வாழ்தல் 
தன் வாழ்விலே இதை வாழ்ந்து காட்டி நமக்கு வெறும் ஆசானாய் அல்ல முன்னோடியாய் முதற்பிள்ளையாய் மூத்த சகோதரனாய் விளங்கும் கிறிஸ்துவின் வழித்தோன்றல்கள் நாம் என்று சொல்லிக்கொள்ள நமக்கு தகுதி உள்ளதா என்று நம்மையே வினவ வேண்டியுள்ளது. 

இறைவன் அவருக்கு அருளிய எப்பெயருக்கும் மேலான பெயரை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள இறைமகனின் வழிநிற்கும் அழைப்பு பெற்றவர்கள் நாம். கிறிஸ்தவர்கள் என்று உண்மையிலேயே அடையாளப்படுத்தப்பட வேண்டுமானால் அவரைப்போலவே வாழ வேண்டிய சவால் நமக்கு உண்டு. அதை ஏற்றுள்ளோமா? உணர்ந்துள்ளோமா?

No comments: