Monday, January 1, 2018

சனவரி 1: மரியன்னை இறைவனின் தாய் பெருவிழா

மரியன்னையின் இறைத்தாய்மை என்பது நமக்கு ...

ஒரு கொடை ... 
காலம் நிறைவேறிய போது ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவராய் நமது மீட்பர் வந்தார் என்பது இறைவார்த்தை. நம் மீட்பை நமக்கு தர இறைவனின் முதல் தயாரிப்பே  இவ்வன்னை.

ஒரு நினைவுறுத்தல்...
அன்று மீட்பரை மண்ணிற்கு ஈன்ற அவளது தாய்மையை எண்ணி வாயால் போற்றுபவர்களாய் மட்டுமே நாம் இருந்துவிடலாகாது. அவளை போன்றே நம் சிந்தையிலும் சொல்லிலும் செயற்களிலும் இறைவார்த்தையை கருத்தாங்கி இம்மண்ணிற்கு ஈன்றளிக்க நாம் அழைக்க பட்டிருக்கிறோம் என்பதன் நினைவூட்டல் இவ்வன்னை.

ஒரு சவால்...
தன்னையே அளித்தாள், தன் வாழ்வை அளித்தாள், தன் ஒரே மகனை அளித்தாள், தன் கனவுகள் ஆசைகள் ஏக்கங்கள் என அனைத்தையும் அளித்தாள். தான் அளிப்பது இன்னது என்று எண்ணாமலே கூட அளித்தாள். நாம் நம்மிடம் உள்ளதை அளிக்கவே இத்தனை சிந்திக்கும் போது நம்மையே அளிக்க எத்துணை சிந்திப்போம் என்று நம்மையே வினவ வைக்கும் அன்னை இவள். அவளது தன்னளிப்பு நமக்கு மாபெரும் சவாலே.

No comments: