Monday, January 1, 2018

சனவரி 2: உண்மை கிறிஸ்துவை கண்டுகொள்வோம்

கிறிஸ்து மனிதனா? கடவுளா?


இயேசு உண்மையில் மனிதரா கடவுளா என்ற வாக்குவாதம் தொடக்க கால திருச்சபையிலே பெரும் சர்ச்சையாய்  இருந்தது. அதற்கு  தெள்ளத்தெளிவான  ஒரு சான்று இன்றைய முதல் வாசகம். இயேசு மனித உருவம் மட்டுமே கொண்ட கடவுளின் மகன் என்று ஒரு தரப்பினரும், அவர் மனிதனாய் இருந்து பின்னர் கடவுளால் உயர்த்தப்பட்டவர் என்று ஒரு தரப்பினரும் வாதிட்டனர். ஆனால் திருச்சபை கிறிஸ்துவின் மனிதத்தையும் அவரது கடவுள் தன்மையையும் பிரித்து பார்த்தால் இயலாது என்பதை தொடக்கம் முதலே ஆழமாய் கற்பித்து வந்துள்ளது.

அவரது மனித தன்மையில் கடவுளின் மகனை காண இயலாதவர்கள், மனிதனில் உறையும் இறைவனை காண இயலாது என்ற உண்மை இன்றும் எதார்த்தமே. மனிதனாம்  கிறிஸ்துவில் கடவுளின் மகனையும்,  கடவுளில் மனிதனையும் முதலில் முழுமையாய் கண்டுகொண்டு அதை உலகிற்கு அறிவித்தவர் என்ற பெருமை திருமுழுக்கு யோவானையே சாரும்.

இன்று நமக்கு விடுக்கபடும் அழைப்பும் இதுவே: துன்பங்களில் துவண்டுகிடக்கும் மனிதர்களில், சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் சகோதரர்களில் , ஏழ்மையாலும் சுயநல ஏய்ப்பாலும் வாவிழந்த உள்ளங்களில் உண்மை கடவுளின் உருவை காண முயலுவோம், இதோ கிறிஸ்து என்று பறைசாற்ற துணிவோம்.

No comments: