Sunday, January 21, 2018

சனவரி 22: அழைக்கும் இறைவனின் ஒரே மக்களாய்

ஒரே உள்ளமும் ஒரே மனதும் உள்ளோராய்... 


தன் மக்களாய் வாழ இறைவன் விடுக்கும் அழைப்பு இவ்வாரமும் தொடர்ந்து வருகிறது. யூதாவின் அரசும் இஸ்ரயேலின் அரசும் ஒருசேர வந்து தாவீதின் அரசாட்சியில் இணையும் அழகானதொரு நிகழ்வை குறித்து முதல் வாசகத்தில் தியானிக்கிறோம். இறைவன் நமக்கு தரும் அழைப்பு இதுவே. என்றும் நிலைக்கும் அவரது ஆட்சியின் மக்களாய் நாம் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்பதே. ஓ எருசலேமே தன இறகுகளின் கீழ் குஞ்சுகளை ஒன்றுகூட்டும் தாய்கோழியை போல உன்னை என் சிறகுகளின் கீழ் ஒன்று சேர்க்க நான் எவ்வளவு ஆவல் கொண்டேன் என்று கிறிஸ்து மத்தேயு நற்செய்தியில் கூறுவது போல, நாம் அனைவரும் இறைவனின் ஒரே மக்களாய், ஒரே மனமும் ஒரே உள்ளமும் கொண்டோராய் இணைய வேண்டும் என்று இறைவன் அழைக்கின்றார். 

இந்த நாட்களில் (சன 18 முதல் சன 25 வரை) கிறிஸ்துவர்களின் ஒற்றுமைக்காக செபிக்கின்றோம். இந்த ஒற்றுமை எப்படி வரும் - நாம் ஒரு மனத்தோராய் ஒரு உள்ளத்தோராய் ஒன்றுசேராவிடில்? 

அடுத்தவரை இழிவு படுத்துவது, அவர்களை தீயவர்களாக உருவாக்கப்படுத்துவது, அவர் பெயரை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று எண்ணுவது, அவர்கள் தலை குனிய வேண்டும் என்றோ தங்கள் மகிழ்ச்சி எல்லாம் இழக்க வேண்டும் என்றோ எண்ணுவது... இப்படியெல்லாம் சிந்திப்பவர்கள் கடவுளுக்கு உரியவர்களாக இருக்க முடியுமா? தீயவரே ஆனாலும் நன்மையே செய்யும் மனநிலை, தவறானவர்களேயானாலும் தீர்ப்பிடாத உள்ளம், எவ்வளவு எதிராக செயல்பட்டிருந்தால் அவர்களுக்காக செபிக்கும் மனத்திடம்... இவையல்லவா இறைமக்கள் அடையாளம்? இதை புரிந்து கொள்வோம், இறை மக்களாய் வளர்வோம். நம்மை தன பிள்ளைகளாய் அழைக்கும் இறைவனின் ஒரே மக்களாவோம். 

No comments: