4. தளராத உண்மையுள்ளம் கொண்டிருங்கள்
இன்றைய முதல் வாசகம் பற்பல தகவல்களை நமக்கு அளிக்கின்றது... பவுலும் அவரோடு இருந்தவர்களும் தொடர்ந்து பயணிக்க, யோவான் மாற்கு மட்டும் எருசலேம் திரும்பினார் என்றும், இஸ்ராயேல் மக்களின் வரலாற்றில் நடந்த ஏற்ற தாழ்வுகள், எழுச்சிகள் வீழ்ச்சிகள் அனைத்தை குறித்தும் நாம் காண்கின்றோம். நற்செய்தியில் கிறிஸ்து தனது நம்பிக்கைக்குரிய சீடர் யாரென்றும் தன்னோடே இருந்து வழிமாறவிருக்கும் தவறிய சீடரை குறித்தும் பேசுகிறார். நமது நம்பிக்கை வாழ்வும் இவ்வாறே நிறை குறைகள், வெற்றிகள் வீழ்ச்சிகள் என பலவகை பட்ட அனுபவங்கள் நிறைந்திருக்கும், அனால் இவை நமது மனதை தளரச்செய்ய அல்ல மாறாக நம்பிக்கையில் வளரச்செய்ய என்பதை இன்று நமக்கு இறைவார்த்தை நினைவூட்டுகிறது.
கிறிஸ்துவின் மந்தையை சார்ந்தவர்கள், கடவுளின் மக்கள் எனப்படுபவர்கள், மனந்தளராதவர்களாய் ஊக்கமிக்கவர்களாய் வாழக்கூடியவர்கள். அதற்காக தவறுகளிலிருந்து பாடம் கற்க அவர்கள் மறுப்பதில்லை. உண்மையுள்ளம் என்பது, தனது தவறுகளை தெளிவாய் உணர்ந்த உள்ளம், தனது வலுவின்மையை மறைக்காது ஏற்கும் உள்ளம்... ஆனால் எந்நேரத்திலும் தளராத உள்ளமாகவும் வாழ்தலே இறைவனின் மக்களுக்கான அடையாளம்.
என் குறைகள் எனக்கு தடைகளல்ல... அவை என்னை தாங்கும் அவரை எனக்கு உணர்த்தும் வழிகள். வலுவின்மையிலே உண்மையாய் மனம் தளராதவர்களே இறைவனின் மக்களாய் வாழ இயலும், ஏனெனில் அந்த வலுவின்மையிலேயே, இறைவன் எனக்கு அருளூட்டுகின்றார். தளராத உண்மையுள்ளம் வளர்ப்போம், நம்பிக்கையில் ஆழப்பட்டு துளிர்ப்போம்.

No comments:
Post a Comment