Saturday, April 21, 2018

இதோ என் ஆயன்...

அணைக்கும், அழைக்கும், அனுப்பும் ஆயன்

ஏப்ரல் 22 - நல்லாயன்  ஞாயிறு 

பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு நல்லாயன் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது... இன்றைய தினம் உலக திருச்சபையிலே இறையழைத்தலின் ஞாயிறாக தியானிக்கப்பட வேண்டுமென திருச்சபை கருதுகிறது. 

நம் ஆயன் நம்மை அணைக்கிறார்... தேடி வந்து, தூக்கியணைத்து, மன்னித்து நம்மை மீட்கிறார்; தன உயிரையே கொடுத்து மீட்கிறார் (நற்செய்தி யோ 10:11-18).

நம் ஆயன் நம்மை அழைக்கிறார்... அவரது ஆடுகளாய் மட்டுமல்ல, அவரை போலவே ஆயர்களாய் மாற... நம்மை அழைக்கிறார். ஆனால் அவரது ஆடுகளாய் முதலில் மாறாமல் நாம் ஆயர்களாய் மாறமுடியாது என்பதால் முதலில் அவரை ஏற்று இறைவனின் பிள்ளைகளாய் மாற நம்மை அழைக்கிறார் (1 யோ 3:1-2). 

நம் ஆயன் நம்மை அனுப்புகிறார்...நம் அன்றாட வாழ்வில் ஆயர்களாய்....நம் குடும்பத்திலே, சமூகத்திலே, உறவுகளிலே ஆயர்களாய், அழைக்கப்பட்டவர்களாய், அவரது பெயரிலே அனைவருக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்புகிறார் (தி.ப 4:8-12).


No comments: