Tuesday, May 15, 2018

மே 16: நம்மை ஒரே மக்களாக்கும் ஒரே ஆவியானவர்

ஒருங்கிணைக்கும் ஆவி, ஒற்றுமை தரும் ஆவி 

தி ப. 20: 28-38; யோ 17: 11b-19



பிரியாவிடையின் தருணத்திலிருந்து செப நிலைக்கு செல்கிறார்கள் இருவரும் - கிறிஸ்துவும், பவுலும். நேற்றைய வாசகங்கள் விடை பெறவிருக்கும் இருவரின் மனநிலையை நமக்கு எடுத்தியம்பின... இன்றோ அவர்கள் பிரியும் முன் இணைந்து செபிப்பதை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றன. தங்கள் பணியை தொடரவிருக்கின்ற தங்களது சீடர்களுக்காக செபிக்கின்றனர் முதல் வாசகத்தில் பவுலடிகளாரும், நற்செய்தியில் கிறிஸ்துவும். ஒற்றுமையின் ஆவி, ஒருங்கிணைக்கும் ஆவி, ஒருமைப்பாட்டின் ஆவியை துணைக்கழைத்து அவரிடமே தங்கள் சீடர்களையும், பணியையும் சரணாக்குகின்றனர்! இந்த ஒருமை பாட்டிற்கும் ஒருமனத்தன்மைக்கும் எதிரான எந்த ஆற்றலையும் அசுத்த ஆவியையும் அடையாளம் கண்டு தவிர்க்கவும் அழைக்கின்றன இந்த வாசகங்கள். 

நம்மிடையே கருத்து வேறுபாடு வரின் அதை நாம் எப்படி எதிர்கொள்ளவேண்டும், எதை கொண்டு மேற்கொள்ளவேண்டும் என்பதை நமக்கு நாசூக்காய் எடுத்துசொல்லுகின்றன. கருத்து வேறுபாடுகள், நமது சிந்தனையையும் செயல்பாடுகளையும் தூய்மை படுத்துகின்றன,  

ஆவியானவரை முன்னிறுத்தி, அவரது பணியை முன்னிறுத்தி, அவர் அளிக்கும் ஒற்றுமையையும் ஒருமனத்தன்மையையும்  சிரமேற் ஏற்று, எந்த ஒரு தீய ஆற்றலும் நம்மை ஆட்கொண்டுவிடாமல் பாத்துக்கொள்ள நம்மை அழைக்கின்றது இன்றைய வழிபாடு. பணத்தாசையும், தன்மையப்படுத்துதலும், நம்மை தன்னலவாதிகளாக்கி பிரிவினை தூண்டுவன என்பதை நாம் உணர வேண்டும். நம்மை ஒரே மக்களாக மாற்றும் ஆவியை பெறவேண்டும், ஒரு மனத்தோராய் நாம் வாழவேண்டும் என்று நம்மை இறைவன் அழைக்கின்றார், உணர்ந்து ஏற்றுக்கொள்வோம்.

No comments: