தியாக தீபங்கள் அணையா விளக்குகள்
1அரசர் 17: 7-16; மத் 5: 13-16
நாம் ஒளி கொடுக்க மட்டுமல்ல, ஒளியை போலவே கொடுத்திட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை விளக்குகிறது இன்றைய இறைவார்த்தை. கொடுப்பதன் இன்பம் பெறுவதில் இல்லை என்பது நாம் அறிந்ததே, வாழ்வில் உணர்ந்ததே. ஆனால் கொடுப்பது அனைத்துமே இறைவன் நம்மிடம் எதிர்பார்க்கும் கொடுத்தலுக்கு இணையாவதில்லை. இன்றைய முதல் வாசகத்தில் ஒரு கைம்பெண்ணை சந்திக்கின்றோம்... அவர் கொடுத்தார். தன்னிடம் உள்ளவற்றிலிருந்து மட்டுமல்ல, தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்தார்! இருந்தது சிறிதே ஆயினும் உள்ளது அனைத்தையும் கொடுத்தார். அதனால் தான் அவரிடம் இருந்தது தீரவே இல்லை... தியாக தீபங்கள் அனைவதில்லையல்லவா!
கிறிஸ்து உள்ளவற்றிலிருந்து கொடுத்தல், உள்ள அனைத்தையும் கொடுத்தல் எனும் இவற்றை தாண்டியதொரு கொடுத்தலை குறித்து நம்மிடம் பேசுகிறார்... அதற்கு அழகானதொரு குறியீடையும் நமக்கு தருகிறார் - ஒளி! உலகிற்கு ஒளி நீங்கள்... ஒளியாய் கொடுத்திடுங்கள். ஒளி தன்னிடம் உள்ளதிலிருந்தோ, யாருக்கு தருகிறோம் என்று தரம்பிரித்தோ, தருவது சரியா இல்லையா என்று சீர்த்தூக்கியோ தருவதில்லை. தான் அணையும் வரை தருகிறது, உள்ள அனைவருக்கும் தருகிறது, எதையும் எதிர்பாராது தருகிறது.
உள்ளவற்றிலிருந்து மட்டுமல்ல, உள்ள அனைத்தையும் மட்டுமல்ல, உங்களையே கொடுத்திடுங்கள், இறைவனுக்காய், இறை சித்தத்திற்காய் உங்களையே கொடுத்திடுங்கள்... ஒளியாய் கொடுத்திடுங்கள். தியாக தீபங்களாய், அணையா விளக்குகளாய் என்றென்றைக்கும் சுடர்விடுங்கள்!

No comments:
Post a Comment