உண்மை கிறிஸ்துவனை அடையாளம் காட்டுவது எது?
கட்டளைகளை கீழ்ப்படிதல், கடமைகளை தவறாமல் செய்தல், ஒறுத்தல் ஒடுக்கமென இறைவனுக்காக துன்பங்கள் ஏற்றல், தியாகங்கள் செய்தல் பல வகைகளில் இறைவார்த்தையை அறிவித்தல்.... இதில் எது உண்மை கிறிஸ்தவனை அடையாளப்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
கட்டளைகள் கடமைகள் என்று சொன்னால் அதில் தவறு ஏதும் இல்லை ஆனால், நாம் இன்னும் பழைய எண்ணங்களிலேயே மூழ்கி இருக்க கூடும் என்று இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்து கூறுகிறது.
கிறிஸ்துவில் உள்ளவர்கள் புது வாழ்வு அடைந்துவிட்டவர்கள் என்று பவுல் அடிகளார் கூறுவார். அவ்வாறு புதுமை அடைந்துவிட்டவர்கள், புது சிந்தனைக்குள்ளும் வரவேண்டாமா என்று கிறிஸ்து நம்மை அழைக்கிறார். புது தோற்பைகளில் புது இரசம் என்பது போல, நமது சிந்தனை கிறிஸ்துவில் புதுமை அடைந்ததை, புது வாழ்வை அணிந்ததாய் இருத்தல் வேண்டும் - புது அடையாளம், கிறிஸ்துவுக்குரிய அடையாளம், அன்பும் உறவும் தவிர வேறு எது இருக்க முடியும்?
உண்மை கிறிஸ்தவ அடையாளம் என்பது அன்பும் உறவும் மட்டுமே. இவையின்றி பாராட்டப்படும் கடமைகளோ, தியாகங்களோ, வெறும் சட்டங்களோ உண்மை கிறிஸ்துவின் அடையாளம் ஆகா!

No comments:
Post a Comment