குருத்து ஞாயிறு - 25.03. 2018
இத்தனை நாளாய் நாம் மேற்கொண்ட பயணம் இன்று புது வேகம் பெறுகிறது! இன்று கிறிஸ்து பெரும் கூட்டத்தோடு நடந்து செல்கிறார்... ஆரவாரமும் அரவமும் நிறைந்த அந்த கூட்டத்திலே பல மனநிலைகளோடு மக்கள் பயணித்தனர்... அந்த கூட்டத்திலே நீயும் உண்டு!
புனித வாரத்தின் இந்த நாள் உன்னிடம் கேட்கும் கேள்வி: இந்த கூட்டத்திலே நீ எங்கே? நீ யார்?
கூட்டத்தில் ஒருவராக வேடிக்கை பார்க்க வந்தவரா, கிறிஸ்துவை கைது செய்ய ஒழித்து கட்ட சதி திட்டம் தீட்டும் குழுவில் ஒருவரா, அவரோடு இருப்பது போலவே அவருக்கு எதிராய் இருக்கும் ஒருவரா, எதற்கு இருக்கிறோம் என்றே தெரியாது இருக்கும் ஒருவரா, அல்லது உண்மையிலேயே கிறிஸ்துவுக்காக எங்கும் செல்ல தயாராய் இருந்தவர்களில் ஒருவரா?
கிறிஸ்துவின் பயணத்தில் நான் யார் என்று நமக்குள்ளாக ஒரு கேள்வி எழுப்பி தனித்து சிந்திப்போமா?
No comments:
Post a Comment