எதை நீ முன்னிறுத்துகிறாய் - உலகம் உன்னை கேட்கிறது!
ஸ்தேவானின் முகம் ஒளிர்வதை அவர்கள் கண்டார்கள்... எனினும் அவரை கொன்றார்கள். கிறிஸ்து செய்த அனைத்து புதுமைகளையும் அவர்கள் கண்டார்கள், எனினும் அவர் தந்த வெறும் உணவுக்காக அவரை பின்தொடர்ந்தார்கள்! எதிர்த்து நிற்பதாலோ, நிராகரிப்பதாலோ மட்டுமல்ல சரியான முக்கியத்துவத்தை தராமலிருப்பதாலும் இறைவனை விட்டு நாம் அகன்று போகலாம். எதிர்த்து நிற்பது என்பதோ, நிராகரிப்பது என்பதோ தெளிவான ஒரு நிலைப்பாடாகும்; ஆனால் உடனிருப்பது போன்றே இருப்பதும் அதே சமயம், உரிய இடத்தையும் முக்கியத்துவத்தையும் தராமலிருப்பதும் நமது வாழ்க்கையின் தரத்தையே குறைத்துவிடுகிறது.
இறைவனின் பிள்ளைகள், கடவுளின் மக்கள் என்றால், நமது வாழ்வில் எது முக்கியத்துவம் பெறுகிறது என்று இந்த உலகிற்கு நாம் தெளிவாக எடுத்து சொல்லியாக வேண்டும். உலகிற்கு எடுத்து சொல்லவேண்டுமென்றால், அது எனக்கு தெரிந்திருக்கவேண்டும். உண்மையிலேயே என் வாழ்வின் முக்கியத்துவம் என்ன? எதை நான் முதன்மை படுத்துகிறேன்? எது எனது கவனத்தையும் நேரத்தையும் அதிகம் எடுத்துக்கொள்கிறது...என்று நான் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது.
இறைவனையும் இறைவனுக்கு உரியதையும் நான் முன்னிறுத்தும் போது, எனது வாழ்வும் ஒளிர்கின்றது, அதை உலகும் காண்கின்றது. காண்பதனால் மட்டுமே அதை உலகு ஏற்கப்போவதும் இல்லை, என்னை கொண்டாடப்போவதும் இல்லை... எனினும் என் நிலைப்பாடுகள் மாறாமலிருக்கவேண்டும்... அப்படி இருப்பின், நானும் விண்ணகம் திறந்திருப்பதையும், மனுமகன் தந்தையின் வலப்பக்கம் விற்றிருப்பதையும் காண்பேன்!
No comments:
Post a Comment