அக்டோபர் 23, 2018: எபேசியர் 2:12-22; லூக்கா 12: 35-38
நம்மில் அனைவருமே ஏதோ ஒரு காலகட்டத்தில் அல்லது இப்போதும் கூட தேர்வை கண்டு அஞ்சுவதுண்டு. படிக்கும் பிள்ளைகள் மட்டுமல்ல, வேறு நிலைகளிலும் கூட தேர்வு என்றால் ஒருவிதமான கலக்கம் இருக்கத்தான் செய்கிறது. தேர்வு பயம் போக்க ஆசிரியர்கள் தவறாமல் கூறும் தலையாய வழிகள் - அன்றாட பாடங்களை அன்றன்று படித்து முடிப்பது; ஒவ்வொரு நாளும் அன்றைய வகுப்பை குறித்து மறு ஆய்வு செய்து கொள்வது; இவ்வாறு செய்தால் தேர்வு வரும்போது அந்த நபர் ஏற்கனவே தயாராக இருக்கமுடியும் என்பதே! தேர்வு என்பது கற்கும் கல்வியின் முடிவிலே நாம் கற்றுக்கொண்டவற்றை சீர்தூக்கி பார்க்கவே தவிர, அதற்காக மட்டுமே ஆண்டு முழுவதும் நாம் தயாரித்துக்கொண்டு இருப்பதாய் எண்ணிவிட கூடாது. தேர்வை மட்டுமே முன்னிறுத்தி நடக்கும் ஒரு தயாரிப்பு உண்மையான கல்வியாக முடியாது. தேர்வுகளை மையப்படுத்தி அல்ல அன்றாடம் கற்கும் பாடங்களை மையப்படுத்தியே கல்வி அமைய வேண்டும். இங்கு ஏதோ படிக்கும் திறன் குறித்த வகுப்பு எடுப்பதாக நினைத்துவிட வேண்டாம். இன்றைய இறைவார்த்தையும் இதையொட்டியே இன்று பேசுகிறது.
தேர்வு பயம் போலவே பலரை இறுதி தீர்வு பயமும் ஆட்கொண்டுவிடுகிறது. அதை நாம் எப்படி எதிர்கொள்வது?
நேற்று வாழ்வு என்னும் கொடையை குறித்து சிந்தித்தோம், இன்று மற்றொரு சிறப்பான கொடையை குறித்து சிந்திக்க அழைக்க படுகிறோம்... நமது அடையாளம்! ஆம் வாழ்வு என்னும் கொடையை நாம் கேட்காமலே நமக்கு வாரிவழங்கியுள்ள இறைவன், நமக்கென ஒரு அடையாளத்தையும் கொடையாய் தந்துள்ளார். அவரது உருவையும் சாயலையும் தாங்கியவர்களாய், அவரது மக்கள், அவரது பிள்ளைகள், அவரது மகன், மகள் என்ற அடையாளத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்த அடையாளம் நம் மனதில் ஆழமாய் பதிந்திருந்தால், ஒவ்வொரு நாளும் இதற்கு தகுதி உள்ளபடி வாழ நாம் முனைப்பாய் இருந்தால், நமது அன்றாட வாழ்வின் செயல்கள் முடிவுகள் அனைத்தையும் இந்த அடையாளத்திற்கு தகுதியுள்ளவைகளாய் நான் தெளிந்து தேர்ந்தால், நான் ஏன் இறுதி தீர்வை கண்டு அஞ்ச வேண்டும்?
நான் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் எனது முடிவுகள் எனது தேர்வுகள் ஒவ்வொன்றையும் எனது அடையாளத்தை மனதில் நிறுத்தி நான் மேற்கொண்டேன் என்றால், எனது சொல்லும் செயலும், வாழ்வும் வாக்கும், உள்ளமும் உறவுகளும் எனது அடையாளத்திற்கு ஏற்ப இருந்தது என்றால், நான் இறப்பை குறித்தோ, இறுதி தீர்வை குறித்தோ எந்த கவலையும் கொள்ள வேண்டியதில்லை.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நொடியும் இறைவனின் அன்புமிக்க பிள்ளைகள் என்ற நமது அடையாளத்திலிருந்து தவறிவிடாமல் நாம் வாழும்போது... தேர்வோ தீர்வோ, எதைக்கண்டும் நாம் அஞ்சவேண்டாம்!

No comments:
Post a Comment