Saturday, January 6, 2018

சனவரி 7: வெளிப்படும் இயேசு

இதோ என் அன்பார்ந்த மகன் 

கிறிஸ்துவின் திருமுழுக்கு பெருவிழா


கிறிஸ்து பிறப்பு காலத்தின் நிறைவாக வருகிறது கிறிஸ்துவின் திருமுழுக்கு பெருவிழா, அதுவே கிறிஸ்து பிறப்பு காலத்தின் உச்சகட்டமும் கூட என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. தன்னவரை தேடி வந்த இறைவன் தன்னையே முழுமையாய் வெளிப்படுத்தும் தருணம் இது. இதோ என் அன்பார்ந்த மகன் என்று ஒலிக்கும் அந்த குரல் உண்மையில் கூறும் செய்தி என்ன தெறியுமா? இதோ நான். இதோ என் அன்பு. இதோ என் உடன்படிக்கையின் அடையாளம். இதோ உங்களுக்கு என் மாபெரும் கொடை - இதோ இயேசு! இங்கு வெளிப்படுவது இயேசு, இறைவனின் மகன் மட்டுமல்ல, இங்கு இறைவனே தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்! மண்ணில் வந்து பிறந்த அந்த மாபெரும் கோடை படிப்படியாய் தன்னையே நமக்கு வெளிப்படுத்தி வருவதை இந்நாட்களில் தியானித்து வந்தோம் - முதலில், இடையாருக்கு, பின் கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுக்கு, பின் சிமியோன் அன்னாளின் வழியாக சூசைக்கும் மரியன்னைக்கும், இதோ இன்று மக்களனைவருக்கும் தன்னையே வெளிப்படுத்துகிறார் இறைவன்.

வெளிப்படும் இயேசு என்னவாக வெளிப்படுகிறார் என்று உற்று நோக்குவோம். வல்லமையாகவா? பேரரசராகவா? தீண்டமுடியாத நெருப்பாகவா? அல்லது தொடமுடியாத ஆற்றலாகவா? இல்லை - கொடையாக, இறைவனின் கொடையாக, அன்பாக, உடன்படிக்கையின் அடையாளமாக, இறைவனின் அன்பார்ந்தவராக, நம்மவராக, நமக்கானவராக!

இறைவனின் அன்பாக வெளிப்படும் இயேசு, நம்மை அன்பாக மாற அழைக்கிறார். நேற்று பேசிய திருத்தந்தை ஆழமானதொரு கருத்தை பகிர்ந்துள்ளார்: கிறிஸ்த்து ப்ரிரப்பு விழா முடிந்து விட்டது என்று நினைத்துவிட வேண்டாம்- அது வாழ்நாளெல்லாம் தொடர வேண்டியுள்ளது. நாம் ஒருவர் மற்றவர் மீது வைத்துள்ள அன்பிலே, நாம் ஆதரவற்றவர்கள் மீது காட்டுகின்ற அன்பிலே அது தொடர்ந்திட வேண்டும். இறைவனின் அன்பாம் கிறிஸ்துவின் வெளிப்பாடுகளை நாம் மாற நமக்கு தரப்படும் அழைப்பு இது.

இறைவனின் உடன்படிக்கையின் அடையாளமாய் வெளிப்படும் இயேசு, அந்த உடன்படிக்கைக்கு ஏற்றவர்களாய் வாழ நம்மை அழைக்கின்றார். உடன்படிக்கை என்பது வெறும் ஒப்பந்தம் அல்ல. வெறும் கொடுக்கல் வாங்கல் அனைத்தையும் தாண்டி அது அழியா உறவின் அடையாளம். இறைவனோடு நமக்குள்ள உறவு என்றுமே அழியாது, அது நம்மால் அல்ல ஆனால் என்றும் மாறாத இறைவனால்! என்றும் மாறாத அவர் நாம் இவ்வுறவை உணர வேண்டும் அதற்கு ஏற்றவர்களாய் மாறவேண்டும் என்று நம்மை அழைக்கிறார். அதன் ஆழமான அடையாளமே கிறிஸ்துவின் வருகையும், அவரது மரணமும் அவரது உயிர்ப்புமாகும். எதையும் எதிர்பாராத உண்மையுள்ள உறவில் நாம் வளர்வோமா?

இறைவனின் அன்பார்ந்தவராற் வெளிப்படும் இயேசு, நம்மையும் அன்பார்ந்தவர்களாய் உணர அழைக்கிறார். நமது திருமுழுக்கிலே இறைவன் இதே வார்த்தைகளை நம்மை குறித்தும் கூறினார் என்பதை நாம் உணரவேண்டும்: இதோ என் அன்பார்ந்த மகன், மகள் என்று இறைவன் அன்று நம்மை தேர்ந்துக்கொண்டார். அவ்வார்த்தைகளுக்கு உரியவர்களாய் அவ்வுணர்வை உள்வாங்கியவராகளாய் நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும் என்று இறைவன் ஆசிக்கிறார். 

வெளிப்படும் இயேசுவின் விருப்பம் அறிந்தவர்களாய் அவரது உறவில் சகோதர சகோதரிகளாய் தெரிந்துக்கொள்ளப் பட்டவர்களாய், ஒவ்வொரு நாளும் வாழ முனைவோம். கிறிஸ்துவை போன்றே அந்த பொன்னான வார்த்தைகளை கேட்போம்: இதோ என் அன்பார்ந்த மகன், அன்பார்ந்த மகள் - இவரில் நான் பூரிப்படைகிறேன்.

UNWRAPPING JESUS

The Love, the Covenant and the Beloved

SOLEMNITY OF THE BAPTISM OF THE LORD7th January, 2018


Christmas season draws to its close with the Baptism of the Lord, because the manifestation is made as clear as possible at this point when the voice from heaven thunders, "this is my beloved Son!" The moment definitively seals the greatest of the gifts that God has ever given humanity: God's only Son...Jesus the Christ, the Word made flesh! The gift that came down to us on that Christmas night, in the lowliness of the manger, has been gradually unwrapped these days, with manifestations - first to the shepherds, then to the wise men and slowly but strongly to Mary and Joseph, as they beheld that Son of God, in their humble hands.

Today is the culmination of the unwrapping...Jesus the gift of God is unwrapped so magnificently in the Liturgy today. We are called to behold that gift, so that the warning that John gives in his Gospel: he came unto his own and his own did not recognise him, may not happen in our case.

We are called to behold Jesus, the LOVE OF GOD. Jesus is the love of God personified. God's love takes flesh and pitches the tent amidst us... in the person of Jesus! Wherever Jesus went there was healing, life, happiness, forgiveness, in short he was the presence of God, the presence of love, love which lived among people. That is what we are called to perceive, as perceived Peter in the second reading today! To perceive Love living amidst us, manifest today by the very voice of God. Perceiving the presence we are called to transform ourselves into presences of love...for the same voice cries out to us today, in the suffering world, in the marginalised persons and in the exploited brothers and sisters!

We are called to behold Jesus, the COVENANT OF GOD. Isaiah proclaims those beautiful words, : I have given you as a covenant to the people, a light to the nations. A covenant is more than a contract; a covenant is more than an agreement. It is something that is etched into the lives of those who are involved. It is taking responsibility for each other, that is why the Church defines marriage as a covenant! Jesus is the sign of the responsibility God took for his children; God did not spare even God's only Son, writes the Apostle. Perceiving Jesus as the covenant of God, we are called to take responsibility for our brothers and sisters, we are called to concern ourselves with the blind and the deaf of our society, the poor and the needy of our locality, the marginalised and the oppressed in our contexts.

We are called to behold Jesus, the BELOVED OF GOD. The voice declares it in all clarity, as wrote Isaiah of old. "This is my beloved, in whom i am well pleased!" In declaring God's love for Jesus, the voice today declares to each of us: you and I... we are the beloved of God...in whom God takes delight! In our Baptism, God made us God's own, and we belong to God and our God takes delight in us (Ps 149:4). 

In baptism we are made sons and daughters of God...that is brothers and sisters of Jesus, the greatest gift of God, Jesus the Love of God, the covenant of God and the beloved of God...and in Jesus our brother, we are called to be in our contexts, the presence of the love of God; in Jesus our covenant, we are called to be the signs of the covenant of God with the suffering humanity today; in Jesus the beloved of God, we are called to live our lives, every day and every moment pleasing to the Lord, who longs to declare, regarding each of us, "This is my beloved son, my beloved daughter, in whom I am well pleased!"

சனவரி 6: ஒளியின் மக்களாய் வாழ

திருக்காட்சி பெருவிழா 2018


உண்மையான ஒளி உலகிற்கு வந்தது, ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை. அவர் தமக்குரியவரிடம் வந்தார். அவருக்கு உரியவரோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.அவருக்குரியவர்கள் நாம், ஒளியின் மக்கள் நாம், ஏனெனில் அவரை நாம் கண்டுள்ளோம், அவரை நாம் ஏற்றுள்ளோம்! இதையே என்று கொண்டாடுகின்றோம். இன்று நமக்குள்ளாக நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வியும் இதுவே: நாம் அவரை உண்மையிலேயே கண்டுகொண்டுள்ளோமா? அவரை உண்மையிலேயே ஏற்றுக்கொண்டுள்ளோமா? கடவுளின் வெளிப்பாடு இன்றும் தொடர்ந்து நமக்கு வந்த வண்ணமே உள்ளது... இறைவனை உண்மையிலேயே கண்டுகொண்டிருந்தால், அவரது ஒளியை உண்மையிலேயே ஏற்றுக்கொண்டிருந்தால் இன்றும் தன்னையே வெளிப்படுத்தும் இறைவனை நம்மால் கண்டுகொள்ள இயலும். 


பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு அருட்தந்தை ஒருவரை தொடர்வண்டி நிலையத்தில் இருந்து அழைத்து வரும் பொறுப்பை நாங்கள் இரண்டு சகோதரர்கள் ஏற்றுக்கொண்டிருந்தோம். இது ஏதும் புதியதொரு அனுபவம் இல்லையே...எத்தனை முறை நாம் இதை செய்துள்ளோம். ஆனால் இம்முறை ஒரு சிறிய மாற்றம் என்னவென்றால் நாங்கள் இருவருமே மும்பையிலிருந்து  வரும் அந்த குருவானவவரை பார்த்தது இல்லை. எனினும், ஒரு குருவானவரை பார்த்தவுடனேயே கண்டுபிடிக்க முடியாதா  என்ற எண்ணத்தில் கிளம்பிவிட்டோம்... தொடர் வண்டியும் வந்தது... மக்கள் இறங்கினர். இருவரும் இருவேறு திசைகளை நிர்ணயித்ததுக்கொண்டு காத்துக்கொண்டிருந்தோம். அந்த நடைமேடையே ஏறக்குறைய வெறிச்சோடிவிட்டது ஆனால் அந்த குருவானவரை காணவில்லை. எங்களோடு நின்று கொண்டிருந்தவர்களில் ஏறக்குறைய அனைவரும் புறப்பட்டுவிட்டனர். ஓரிருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். எங்களுக்கு கவலையாகிவிட்டது. ஒருவேளை கவனக்குறைவில் தவறவிட்டுவிட்டோமோ என்று குற்ற உணர்வு சற்றே தலைதூக்க ஒரு பெரியவர் எங்கள் அருகில் நின்று கொண்டிருந்தவர் எங்களை பார்த்து கேட்டார்... வெள்ளை வெட்டி, வெள்ளை  அரைக்கை சட்டை முகம் முழுக்க தாடி, கையிலே ஒரு காக்கி நிற கைப்பை... 'தம்பி மும்பையிலிருந்து ஒரு குருவானவருக்கு காத்திருக்கிறீர்களா?' ... அம்மாங்கைய்யா. நான் தான் அது, வாங்க போவோம் என்றார்!

எங்கள் அருகிலேயே நின்று இருந்த அவரை நாங்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை...ஏனென்றால், அவர் எப்படி இருப்பார், என்ன அணிந்து இருப்பார், எப்படி பட்ட பை வைத்திருக்க கூடும் என்று எங்களுக்குள்ளாகவே ஒரு எதிர்பார்பை, ஒரு எண்ணத்தை, ஒரு முற்சாய்வை நாங்கள் ஏற்படுத்திக் கொண்டு காத்திருந்தோம். எங்கள் எண்ணத்திற்கு ஏற்ப அவர் இல்லை என்பதால் அவரை நாங்கள் தவற விட்டுவிட்டோம்.

இன்றும் இறைவன் நம் அன்றாட வாழ்வில் நம்மை சந்திக்க வந்து கொண்டே தான் இருக்கிறார். பல வேளைகளில் நாம் அவரை கண்டுகொள்வதே இல்லை. ஏனெனில் நாம் எதிர்பார்க்காத உருவிலே அவர் வருகிறார்! நம் அயலானில், நாம் ஒரு பொருட்டாகவே கருதாத ஒரு சிலரில், நாம் மதிக்காத நபர்களில், நாம் அன்பு செய்யாத பலரில், நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்ட அந்த குறிப்பிட்ட நபர்களில், தேவையில் உழல்பவர்களில், அனைவராலும் கைவிடப்பட்டவர்களில், இறைவன் நம்மை சந்திக்க வந்த வண்ணமே இருக்கிறார். வெறும் நற்கருணையிலும், கோவிலின் முற்றங்களிலும் மட்டுமே தேடினால் அவரை  நாம் உறுதியாக தவறவிட்டுவிடுவோம்.

அவரை கண்டுக்கொள்ள நாம் ஒளியின் மக்களாய் வாழவேண்டும்... வாழ்வோமா?


Friday, January 5, 2018

TO BE PEOPLE OF THE LIGHT

The Feast of Epiphany : 6th January,  2018

Is 60: 1-6; Eph 3:2-3,5-6,  5-6; Mt 2: 1-12

The Light came to the earth; the Lord came unto His own but His own received him not! We are people of the Light and that is the feast we celebrate today! The feast which reminds us that we are the people of the Revelation. God has revealed Godself to us and awaits our response.

I still remember an experience that I had almost a decade back. Two of us were sent to pick up a priest from the railway station. This is no strange experience! How many times we would have received people in the airports and railway stations! But the twitch here was. ..we did not know the person we are going to pick up. All that we know was that we are going to pick up a middle aged priest from Mumbai who was coming to Chennai. We positioned ourselves in a prominent spot and awaited the guest as the crowd started spilling into the platform from the train. Crowds and crowds of people were passing by but we did not spot our guest. Many who were standing alongside with us waiting for their guests were gone. There was one standing beside me for quite sometime. A man with a dhoti and a white shirt with a long grey beard! He didn't even seem to be looking out for someone. The best surprise was when he asked us. ..'so are you waiting for someone from Mumbai?' We said in unison,  'yes'! And when he said. .."I am the one", we didn't know really how to react!

At times, the Lord reveals Godself but we have certain preconceived ideas that don't allow us to see the Lord. Today we are invited to be people of the light.,  that is people who live in light always,  people who are ready and prepared to receive the revelations that God wishes to give us.

The Lord reveals himself to us constantly. ..first of all through extraordinary means: let's pray that God gives that gift to many of us!  But there is another way God reveals,  the ordinary means: through prayer experiences,  spiritual direction,  liturgical celebrations, etc. Let's take care when we celebrate these moments in life so that we don't miss the revelations involved.

There is the third way which is more subtle and more challenging: the Daily means.  The fact is that the Lord constantly reveals himself through every day experiences...through people we encounter, through challenging situations we face,  through successful experiments we have, through people who come to us in need,  through persons who demand our responsibility and so on. Let's open our eyes, our ears,  our hearts. ..that we may receive the Light that encounters us daily in our life.

It takes a challenging faith to remain the people of light!

Thursday, January 4, 2018

சனவரி 5: உள்ளார்ந்த வாழ்வே கடவுளில் வாழ்வு

கடவுளில் வாழ்தல் என்பது ...

கடவுளில் வாழ்தல் என்பது வெறும் சொல்லிலும் செயலிலும் வாழ்வதல்ல . அது மனச்சான்றிற்கு உரிய உள்ளார்ந்த வாழ்வாகும். அனைத்தையும் கடந்து உள் நோக்கக்கூடிய 'கட வுள் ' மட்டுமே அறியக்கூடிய வாழ்வு அது. ஆகையால் தான் எல்லா சாட்சியங்களையும் விட மேலானதொரு சாட்சியம் மனச்சான்றின் சாட்சியமாகும்.

வந்து பாருங்கள் என்று கிறிஸ்து கூறினார், அதையே தன்  சீடர்களுக்கு சவாலாகவும் தந்தார். அதை ஏற்றுக்கொண்டு அவர்களும், நேற்று அந்திரேயாவும் இன்று பிலிப்பும் துணிச்சலோடு வந்து பாரும் என்று அடுத்தவருக்கு அழைப்பு விடுகின்றனர். நமது உள்ளார்ந்த வாழ்வை இவ்வுலகம் காணும்படி  வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

துணிச்சலோடு இவ்வழைப்பை ஏற்றுக்கொண்டு, அடுத்தவரின் பாராட்டுக்காகவோ அவர்களின் நன்மதிப்புக்காகவோ அல்லது அவர்களது எதிர்ப்புக்கு பயந்தோ அல்லது வேறு விளைவுகளுக்கு அஞ்சியோ அல்ல உள்ளார்ந்த வாழ்வுக்கு உண்மையுள்ளவர்களாய் கடவுளின் எண்ணத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்களாய் வாழ முற்படுவோம்.

உள்ளார்ந்த வாழ்வே கடவுளில் வாழ்தல் என்பதை உலகறிய எடுத்துரைப்போம்.



THE INTERIOR CASTLE

WORD 2day: 5th January, 2018

1 Jn 3:11-21; Jn 1:43-51

Reflecting on the Word today, I was instantly reminded of the famous title written by St. Teresa of Avila - the Interior Castle. And I was also smiling to myself thinking of a spiritual friend of mine once asking me, "which mansion have you entered now?", referring to the interior spiritual progress as presented by the holy Carmelite nun. It is not about showing where we have reached and proving what we have achieved!

Our life of faith actually is a life lived at the interior castle of our beings! That is why we are required to invite people to 'come and see', as does Philip today. This is in continuation with the reflection we had yesterday, where Jesus invited the disciples to 'come and see' and challenged them to invited others! Andrew yesterday and Philip today took up that challenge and invited others! 

If we have to share our spiritual experience with others, it is not with words and proofs! Words and deeds speak much less than what our personal interior lives can speak. What we are called to dare is, to invite others to come and see our life, our innermost life. When our interior life is orderly, when our conscience is at peace, when our inner sanctuary is maintained with holiness and purity, our entire life can become a testimony to others: we can without fear say, "Come and See" my interior castle! 

The Interior Castle is where my Lord lives, let the whole world see the Lord dwelling there! 

Wednesday, January 3, 2018

சனவரி 4: வந்தனர், கண்டனர், தங்கினர்...

 அவரிடம் வந்தவர்கள் கண்டனர் தங்கினர்...



யார் இவர்? இவரை குறித்து ஏன் நமது குருவான யோவான் பேச வேண்டும்? இவரிடம் அப்படி என்ன சிறப்பாக உள்ளது? என்ன தான் செய்து வருகிறார்? இன்னும் பலப்பல கேள்விகள் அந்த சீடர்களின் மனதில் தொக்கி நின்றன. எல்லா வினாக்களுக்கும் ஒரே பதிலில் தெளிவளித்தார் இயேசு: வந்து பாருங்கள். 

தன் தனிப்பட்ட வாழ்வை எந்த ஒரு தயக்கமும் இன்றி திறந்த புத்தகமாக வாழ துணிந்தார் கிறிஸ்து. இன்று என்னால் அப்படி பட்ட வாழ்வை வாழ முடியுமா: நீங்கள் யாராக இருந்தாலும் சரி... நான் யாரென்று வந்து பாருங்கள் என்று துணிவோடு என்னால் அழைப்பு விடுக்க முடியுமா? முன்னால் பேசுவது ஒன்று, பின்னால் முனகுவது வேறொன்று; பொதுவில் வாழும் வாழ்க்கை ஒன்று, தனிப்பட்ட உலகம் வேறொன்று; வெளிப்படையாக பேசும் விழுமியங்கள் ஒன்று, உள்ளத்தில் ஊறியுள்ள மதிப்பீடுகள் வேறு என்று நான் வாழ்ந்து கொண்டிருந்தால், துணிவோடு, வந்து பாருங்கள் என்று என்னால் எப்படி சொல்ல இயலும்?

உள்ளும் புறமும், முன்னும் பின்னும், பொதுவிலும் தனிமையிலும், ஒரே வாழ்வியல் விழுமியங்களை கொண்டிருந்தால் கிறிஸ்துவை போலவே நானும் வந்து பாருங்கள் என்று எளிதில் கூற இயலும். அவர் அழைத்தார், வந்தனர், கண்டனர், அவரோடு தங்கினர். இன்று நான் அழைத்தால், வந்து கண்டு கிறிஸ்துவோடு தங்க தயாராய் இருப்பார்களா?

They came, they saw and they stayed!

WORD 2day: 4th January, 2018

1 Jn 3: 7-10; Jn 1: 35-42

Who is this? Where does he live? Why does our Master point to him as the 'One who is to come'? What is special about him? What has he to offer? - these were the scores of questions that were crisscrossing the minds of those two disciples. But Jesus answered them all with just one response: Come and See! Jesus just let them into his life, and allowed them to see who he was!

Will I be ready to let people into my life and see for themselves who I am? Will my daily life, my words and my thoughts, my choices and my values, manifest to even a casual onlooker, who I am? I have always been tickled by that question that one of our professors was used to ask us: if they arrested you for being a Christian, would they find enough reasons to prosecute you?

This is what John explains in his epistle too. Our life has to tell the world who we are: whether we are children of God or followers of the Enemy. If my life is filled with wrong choices and misfired priorities, will I be communicating Christ to the world? As the Church has been so vociferously teaching at least for the past half a century, the primary mode of evangelisation ought to be our personal lives. 

When those disciples were invited, they came, they saw and they stayed with Jesus! If someone comes, sees my life, will he or she today stay with Jesus?

Tuesday, January 2, 2018

சனவரி 3: அவரைப்போலவே

அவரைப்போலவே இருத்தல் என்பது...



அவரது தன்மையை கொண்டிருத்தல் - எதையும் எதிர்பாராது அன்பு செய்தல், குறைகளை தாண்டி குற்றங்களை மன்னித்தல், வேறுபாடுகள் பாராட்டாது ஏற்றுக்கொள்ளுதல், எந்த தயக்கமுமின்றி தாராளமாய் இருத்தல்... இவையே இறைத்தன்மையை கொண்டிருத்தல் என்று பொருள் படும். 

அவரது செயற்பாட்டினை கொண்டிருத்தல் 
அவரை போலவே சிந்திக்கும் மனம், அவரது வார்த்தைகளையே பேசும் குணம், அவரது செயல்களையே செய்யும் எண்ணம், சுருங்கக்கூறின், சிந்தனை சொல் செயல் அனைத்திலும் அவரை விட்டகலாமல் வாழும் வாழ்வு என்று பொருள் படும்.

அவரது மகனாய் மகளாய் வாழ்தல் 
தன் வாழ்விலே இதை வாழ்ந்து காட்டி நமக்கு வெறும் ஆசானாய் அல்ல முன்னோடியாய் முதற்பிள்ளையாய் மூத்த சகோதரனாய் விளங்கும் கிறிஸ்துவின் வழித்தோன்றல்கள் நாம் என்று சொல்லிக்கொள்ள நமக்கு தகுதி உள்ளதா என்று நம்மையே வினவ வேண்டியுள்ளது. 

இறைவன் அவருக்கு அருளிய எப்பெயருக்கும் மேலான பெயரை நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ள இறைமகனின் வழிநிற்கும் அழைப்பு பெற்றவர்கள் நாம். கிறிஸ்தவர்கள் என்று உண்மையிலேயே அடையாளப்படுத்தப்பட வேண்டுமானால் அவரைப்போலவே வாழ வேண்டிய சவால் நமக்கு உண்டு. அதை ஏற்றுள்ளோமா? உணர்ந்துள்ளோமா?

RESEMBLING GOD

WORD 2day: 3rd January, 2018

1 Jn 2:29 - 3:6; Jn 1: 29-34


The Holy Spirit,  in the form of the dove testified on behalf of Jesus that he was the Son of God. We are made the children of God and the same Spirit testifies for us too. We would be identified as children of God if and only if we resemble God our Father and Mother. That is what John says in his epistle today: we resemble God and that is what we are expected to be in this world.

Resembling God in our being: would mean being loving beyond all expectations, being forgiving beyond all grievances, being welcoming beyond all petty differences and being generous, beyond all calculations.

Resembling God in our doing: wound mean having thoughts that God would have, saying words that God would give, doing things that God would rather do, in short, remaining with the lord- in every thought,  word and deed.

Resembling God made easy: Christ had come to live amidst us to show us how we could resemble God in our lives. It is something that he did not just speak of but showed us in his person and life. Out choices and our values should begin to resemble those of Christ. It is a life long journey that our call as Christians proposes to us. Let us embark on that journey as firmly as possible.


Jesus has shared with us that name above all name that he was given by God - if we have to be worthy of that Holy name of His, let us resemble him. Let us resemble God!