Sunday, April 8, 2018

ஏப்ரல் 9: அழைக்கும் இறைவன்

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா 

இவ்வாண்டு இத்திருவிழா மிக தாமதமாக கொண்டாடப்படுகிறது ... காரணம் நமக்கு தெரிந்ததே. மார்ச் 25 அன்று குருத்தோலை ஞாயிறாகிப்போனதால் நாம் இதை இன்று கொண்டாடுகின்றோம்! 

மரியன்னைக்கு மங்களவார்த்தை சொன்ன தினம் என்று நாம் பொருள் கூறும் இந்நாள் மிக அழகானதொரு செய்தியை நம் ஒவ்வொருவருக்குமே தருகிறது! இன்று நம் கண்முன்னே நிறுத்தப்படும் நிகழ்வில் மூன்று நபர்களை நாம் காணலாம்...

1. கடவுளின் தூதர்: நம்பிக்கை!
நம்பிக்கை என்பது, தம்மையே நமக்கு வெளிப்படுத்தும் இறைவனுக்கு நாம் தரும் பதிலாகும். அவ்வாறு தம்மையே நமக்கு கடவுள் வெளிப்படுத்துகின்றார் என்பதை நமக்கு உணர்த்தும் ஒரு குறியீடு, இறைத்தூதர்! கடவுள் நம்மோடு இருக்கின்றார், தொடர்ந்து நம்மோடு பேசி வருகின்றார், நம்மை அவரது உடனுழைப்பாளர்களாக கருதுகின்றார் என்று நமக்கு உணர்த்தும் நபர் இவர்.

2. கடவுளின் தாய்: எதிர்நோக்கு 
எதிர்நோக்கு என்பது நம் வாழ்வில் கடவுளின் உடனிருப்பு என்றுமே உண்டு, நாம் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை என்பதே. இறைவனின் தாயாக தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாளை பாருங்கள்...சின்னச்சிறு பெண்... பெண்... அதிலும் சிறுமி... உலகம் சிறியது என எதை கருதுகிறது அதையே தன் மாபெரும் ஆற்றலை வெளிப்படுத்துகிறார் இறைவன். இந்த இளம்பெண்ணின் ஒரு சிறுச் சொல்லிலே மனிதத்தின் மீட்பு ஒளிந்திருந்தது என்பது எத்தனை எதிர்நோக்கு தரக்கூடியதொரு குறியீடு!

3. கடவுளின் மகன்: அன்பு 
அன்பு... நாம் அன்பு செய்ய அழைக்கப்பட்டுள்ளோம் ஏனெனில் கடவுள் நம்மை அன்பு செய்துள்ளார், என்பார் யோவான். கடவுளின் அன்பின் மறுக்கமுடியாததொரு அடையாளம், இன்று முன்னறிவிக்கப்படும் இறைவனின் மகன்! இந்த குழந்தை, மனிதம் முழுவதும் ஏங்கி எதிர்பார்க்கும் இந்த மகனே, உலகத்தின் பால் இறைவன் கொண்ட அன்பின் முழுமையான வெளிப்பாடு!

இந்த மூன்று நபர்களின் சங்கமத்திலே தெளிவாய் வெளிப்படும் இறைவனின் செய்தி இதுவே: அழைக்கும் இறைவன் உன்னை இன்று அழைக்கிறார் - உன் பதில் என்ன? அவரது நம்பிக்கையின் கருவியாய், எதிர்நோக்கின் அடையாளமாய், அன்பின் வெளிப்படை இருக்க உன்னை இன்று அழைக்கிறார் இறைவன் - செவி மடுப்பாயா? 


GOD BEGINS...

The Solemnity of Annunciation: 9th April, 2018

Is 7: 10-14, 8:10; Heb 10: 4-10; Lk 1: 26-36


We celebrate the solemnity of Annunciation much later (it should have been March 25th), because of the fact that the feast coincided with the Palm Sunday this year! The Church insists that we do not lose that occasion, however! 

Thinking of the event we celebrate in this feast, I am reminded of something that even as a  boy, I was always taken up. That subtitle in the prayer of the Angelus: GOD BEGINS! 

God is not merely someone who responds... God begins, God initiates, intervenes at the right time even without an asking. That is why St. John proclaimed, we love God because God first loved us (1 Jn 4:19). The feast of Annunciation is a splendid manifestation of this nature of God, the nature of intervening at the appointed time.

We see three people involved here, in this event - in unison they give humanity a holistic life giving message. 

The Angel: stands for Faith - a concrete sign of God's relationship with us. Angels are God's spokespersons, God's messengers and God's extensions which make present God to us. Our Faith is that God continues to live with us, even amidst all the worldliness that we are surrounded by.

Mary: stands for Hope - a concrete sign of Our relationship with God. Mary shines as a counter witness to the hopeless humanity today. Indifference and Individualism marks the humanity of today and Mary's 'yes' is a revolution that spells hope to the world and to the entire humanity. 

The Child: stands for Love - a concrete sign that God still loves the World. God has not given up on us and God will never do! A love that is ready to give totally of Itself (Rom 8:32). The Child that is promised is a sign of God's everlasting and unconditional love that gives life and light to the otherwise darkness filled world today.

Yes, let us remember, God Begins... and we are to respond, respond as soon as possible and as wholeheartedly as possible!



Saturday, April 7, 2018

இரக்கம் - இறைமையின் அடையாளம்

இரக்கமே நமது அடைக்கலம், இரக்கமே நமது அடையாளம்!

இறையிரக்கத்தின் ஞாயிறு - ஏப்ரல் 8, 2018

வாருங்கள் என் காயங்களை பாருங்கள் என்று அழைக்கும் உயிர்த்த கிறிஸ்துவை இன்று நாம் சந்திக்கின்றோம்.

இரையிறக்கத்தின் ஞாயிறாம் இன்று...

கிறிஸ்தவ குழுமமாய் அவரது காயங்களை கண்டு இறைவன் நம்மீது வைத்துள்ள இரக்கத்தை உணர்வோம்...

கடவுளின் சாயலாய் அதே இரக்கத்தை நம்மோடு உள்ளவர் அனைவர்க்கும் பகிர்வோம்...

கிறிஸ்துவின் சீடராய், நம்மை துன்புறுத்த நினைக்கும் உலகை நோக்கி, வாருங்கள், உயிர்த்த எங்கள் மீட்பர் எங்களில் விட்டுச்சென்றுள்ள அடையாளத்தை காணுங்கள் என்று அழைத்து, நம் இரக்கத்தை முழுமையாய் வெளிப்படுத்துவோம்!

இரக்கமே நமது அடைக்கலம், இரக்கமே நமது அடையாளம்!


MERCY: the Mark of a Christian

Divine Mercy Sunday: 8th April, 2018

Come See the Mark that Christ Crucified has left on us!
Second Sunday of Easter: Acts 4:32-35; 1Jn 5:1-6; Jn 20:19-31


This Sunday is liturgically called the Low Sunday which marks the end of the Easter Octave. "A week later", indicates the Gospel today; it was a week later that Jesus appears to all the eleven, including Thomas and patiently, mercifully and lovingly leads them to true faith. The feast of Divine Mercy was instituted and fixed for this day by Pope Saint John Paul II, who was canonised on this ocassion three years ago! 

The first reading speaks of how the early community of Christians becomes a mighty witness to the Lord. They were the epitome of the command that Jesus gave, 'be merciful as your heavenly father is merciful'. Mercy becomes their way of life, or rather their renewed way of life. As a mark of being a Christian, mercifulness to each other specially to those in need, becomes the point of attraction for many...and as the reading goes - the Lord added to their number everyday! Mercy, we know, is the high point of Christian identity. But what matters most is how it is lived on a daily basis. It begins with our life at home: with our dear ones, elderly parents, sickly loved ones, troublesome children, rebellious youngsters... how is our relationship? What level of patience and acceptance do we manifest? Mercy is not weakness, it is meekness!

The Second reading speaks to us of the Source of mercy, God the father of Jesus Christ who in mercy sent the only Son for our salvation! The Mercy of God is given to us as the example and the measure of our "genuineness of faith"! Preaching and believing in high ideals of love and compassion, if we but hate people and divide families, envy others and detest their well being... we are far, far away from God, the God of Mercy and compassion. Mercy is not an ideal, it is a life style; it is not a set of actions, but an attitude to life.

Jesus' encounter with the disciples after his resurrection manifests a special quality of mercy... it is an encounter that is full of unlimited forgiveness and unconditional love! There is no demand that the disciples have to render an account for having abandoned Jesus at the crucial moment of suffering, for having betrayed him or having denied him! All that Jesus does is, tell them he is with them and invite them to be his witnesses throughout the world. That is the mercy of God embodied, incarnate, which dwelt among us in flesh and blood and dwells among us today in the Spirit. Mercy, hence, has to be lived today in forgiveness and love; there can be no place for grudge and grievance, envy and slander, cheating and stealing, killing and enmity. 

An enlightening proposal that Jesus has for his apostles - how to ensure that it was Jesus? Jesus showed them the wounds, the mark that the Crucifiction left on him... the MARKS..come see the the wounds, feel the marks! We need to tell the world, as a proof of our identity as Christian - Come see the Marks that Christ Crucified has left on us!

As we celebrate the Divine Mercy of Jesus...let us understand and accept Mercy as our mark of identity as God's own children, the distinctive character of persons who call themselves Christians! Let us be merciful as our heavenly father is merciful.





Friday, April 6, 2018

உயிர்ப்பின் அழைப்பு: பிடிவாதத்திலிருந்து பிடிமானமுள்ள வாழ்க்கைக்கு...

ஏப்ரல் 7: பாஸ்கா எண் கிழமையில் சனி 


இயேசு உயிர்த்து வந்தபோது அவரது சீடர்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர்களோடு வாழ்ந்தபோது பல முறை அவர்களுக்கு இது குறித்து இயேசு பேசியிருந்தும், உயிர்த்து வந்த போதும் பல அற்புதங்களையும், புதுமைகளையும் கண்ணார கண்டபோதும், அவர்கள் அவரை அடையாளம் காணமுடியவில்லை... இது கிறிஸ்துவுக்கே ஒரு வகையான கோபத்தை உண்டாக்கியது. அதை அவர்களோடு பகிர்ந்தும் கொள்கிறார், அவர்களை கடிந்துகொள்கிறார்! உண்மையில் அவர் மேல் அவர்கள் எத்தனை அன்பு கொண்டிருந்தார்கள் என்பதை அவர் அறிந்திருந்ததனால், அவர்களை கடிந்துகொள்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இல்லை. அவ்வாறு அவர் கடிந்துக்கொண்டதும், தூக்கத்திலிருந்து எழுந்த குழந்தைகளை போல தெளிவுபெற்றார்கள். அதன் பின் அவர்களை எந்த ஆற்றலாலும் அசைக்க முடியவில்லை - கைது, தண்டனை, கசையடி, கல்லெறிதல், மிரட்டல் - எந்த எதிர்ப்பும் அவர்களை நிறுத்தவில்லை. 

நம்மையும் ஒவ்வொரு நாளும் உயிர்த்த கிறிஸ்து பலவகையான அழைப்போடும், ஆலோசனைகளோடும், அணுகியவண்ணமே உள்ளார். ஆயினும், நாம் பிடிவாதம் பிடிக்கும் சிறு குழந்தைகளை போலவே, அவற்றை காணவோ, புரிந்துகொள்ளவோ ஏற்று வாழ்வை மாற்றவோ எந்த முயற்சியும் எடுக்காமல் நகர்ந்து செல்கின்றோம்! காணமுடியாமல் அல்ல, காண விரும்பாமல்; மாற்றமுடியாமல் அல்ல, மாற்ற துணியாமல்! நம்மையும் இறைவன் சில நேரங்களில் குரல் உயர்த்தி கண்டிப்பதுண்டு... அவர் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாய்.

அவரது குரல் கேட்போம், அவர் நம்மோடு இருப்பதை காண்போம், உளமார உணர்வோம், அவரது விருப்பம் உணர்ந்து அதை வாழ்வில் செயல்படுத்துவோம். அப்போதுதான் நம் வாழ்வும் பிடிமானமுள்ள வாழ்வாக, யாராலும் அசைக்கமுடியாத வாழ்வாக, அர்த்தமுள்ள வாழ்வாக, முழுமைபெற்ற வாழ்வாக உருவெடுக்கும். 

பிடிவாதத்திலிருந்து பிடிமானமுள்ள வாழ்விற்கு மாற நான் தயாரா?



The Easter Call: From Obstinacy to Resolve

Saturday within the Easter Octave: 7th April, 2018


Acts 4: 13-21; Mk 16: 9-15

Jesus returned, but they recognised him not! He was a bit annoyed as during his time with them. He takes the liberty to rebuke them, because he knew they loved him. It was for the same reason he did not reject them, but only rebuked them and their slowness to believe, in spite of the repeated signs and wonders. That rightful rebuke reassured the disciples much and they came to a resolve, no one or nothing could affect from then. No threats, no powers, no imprisonments, no lashes, no authority could stop them from proclaiming Christ because they were so powerfully taken up by that encounter with the Risen Christ. They knew he was with them every moment, as he had promised them!


Every day, the Risen Lord returns to us with a fresh proposal to live with us unceasingly; Our obstinacy to hold on to various concerns in life, our blindness to the extraordinary love with which the Risen Lord approaches us, our failure to see through and observe in the events of life, the Lord who walks with us - these deserve a rebuke from the Lord. We live at times like obstinate little children, refusing to see the whole reality; we see only what we want to and we fail to see what we really need to. And from the little that we see, we interpret things and stay put there... thinking that we have figured it all out and we are on the right! The Lord would scream at us, "why don't you open you eyes and see, for your own sakes!"

Let us move on... let us allow the Lord to show us the Lord's real presence with us. It would not matter, until we reach the resolve as did the apostles, to proclaim in our words and deeds, the Lord who has won us over. We are called to be witnesses, beginning from wherever we are to the ends of the world. Are we ready? Are we ready to move on from our obstinacy to a resolve to surrender?

Thursday, April 5, 2018

உயிர்ப்பின் அழைப்பு: ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட, அச்சத்தால் அல்ல!

ஏப்ரல் 6: பாஸ்கா எண்கிழமையில் வெள்ளி 

இயேசுவை கொன்றதோடு தீர்ந்தது தொல்லை என்றிருந்தவர்களுக்கு அவரது உயிர்ப்பின் செய்தி ஒரு அதிர்ச்சியாய் இருந்ததென்றால் அதன் பின் சீடர்கள் மத்தியில் ஏற்பட்ட மாற்றம் பேரதிர்ச்சியாய் இருந்தது. கிறிஸ்து இதை முன்னறிவித்திருந்தார்...இறையரசு விதைக்கு ஒப்பாகும், அதை விதைத்துவிட்டு விதைப்பவன் காத்திருந்தால் அது முளைத்து, வேர்விட்டு செழித்தோங்கி பறவைக்கூட்டங்களுக்கு இல்லமாகும் என்றார். அவ்வாறே அடங்கியதுபோல் தெரிந்த அந்த குறுகிய காலம் முளைத்து வர எடுத்துக்கொண்ட நேரம் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அது முளைத்து வந்தபோது அவர்களுக்கு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது... முளைத்து வந்தது வெறும் பயிரல்ல புயல் என்பதை வெகு விரைவில் அவர்கள் உணர நேர்ந்தது! உயிர்த்த கிறிஸ்துவின் உடனிருப்பு அவர்களுக்கு உறுதி தந்தது, உயர்த்தி நிறுத்தியது, புதிதாய் உருவாக்கியது!

அவர்களது நம்பிக்கை புதுமைகளோடும், அருங்குறிகளோடும் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவரால், உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப் பட்டிருந்தார்கள், அச்சத்தாலும் பயத்தாலும் அல்ல. அவர்களிடம் இருந்த பயமும் நடுக்கமும் காணாமற்போயிற்று! ஏனெனில் அவர்களை ஆண்டவர் ஆட்கொண்டிருந்தார். இது அந்த பரிசேயர்களுக்கும் சதுசேயர்களுக்கும் புரியவில்லை. மற்ற கிளர்ச்சிவாதிகளை போல இவர்களும் அடங்கிவிடுவார்கள் என்று நினைத்தார்கள்...ஆனால் ஈராயிரம் ஆண்டுகள் உருண்டோடிவிட்டன, இன்னும் அடங்கியப்பாடில்லை. 

ஆம் அன்புக்குரியவர்களே... நாம் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட வேண்டும். உண்மைக்கும், நீதிக்கும், இறையரசிற்கும், மனித மாண்பிற்கும், சமத்துவத்திற்கு, உள்ளார்ந்த அமைதிக்கும் எதிராக உள்ள அனைத்து சக்திகளையும் எதிர்த்து நாம் கிளர்ந்தெழ வேண்டும், ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு. ஆண்டவரிலே இணைந்து இறையரசின் கனவுகளை நாம் நிகழ்வாக்க வேண்டும். 

உயிர்ப்பின் அழைப்பு இதுவே - உயிர்த்த ஆண்டவரால் ஆட்கொள்ளப்படுவோம், அச்சத்தால் அல்ல!


The Easter Call: To be fire-filled, not fear-filled!

Friday within the Easter Octave: 6th April, 2018

Today begins the next round of efforts to contain the good news. When Jesus spoke of it, they killed him and heaved a big sigh thinking it was over. Little did they imagine the problem was far from settled. The Reign of God is like the seed that a sower planted in his field, the Master had said... after a brief silence, it will certainly shoot up. Here the Sadducees and the Pharisees begin to feel the startles as they see the first signs of sprouting. That was already too strong! From a fear filled bunch of rugged Jews, the apostles turned out to be fire filled upstarts, gradually shaping up to be formidable people of God, standing for and proclaiming the good news, namely the person of Jesus Christ, the Son of God and Saviour of the World.

The proclamation was strong because it was accompanied by signs and wonders, as the Master himself had set the model. Walking on the Sea, hauling an impossibly large catch of fish...these were no new signs for the disciples. They were merely confirmations of the continued presence of the Lord who had lived and moved with them.The disciples would not allow themselves to be stopped by anyone or anything. Soon we will begin to hear the violence that was unleashed against the new movement of the Risen Lord. Nothing, absolutely nothing, will stop them from their commitment to proclaim the Lord.

Today, if we wish to be Easter people, let our life be a proclamation and a proclamation that is accompanied by signs and wonders: signs that stand counter to the self centered standards of the world today; and wonders that make people see the love and mercy of God in and through us! For that we need to heed the Easter call: to be Fire filled and not fear filled!

Wednesday, April 4, 2018

உயிர்ப்பின் அழைப்பு: உயிருள்ள வார்த்தைக்கு செவிகொடுங்கள்

ஏப்ரல் 5: பாஸ்கா எண்கிழமையில் வியாழன் 

தாங்கள் யார் என்று அறிந்துகொள்ள அன்று சீடர்களுக்கும் முதல் திருச்சபைக்கும் அடிப்படையாய் இருந்தது இறைவார்த்தையே. நேற்று முதல் உயிர்த்த கிறிஸ்து தன சீடர்களின் மனதை திறந்து இறைவார்த்தையை உணர்ந்திட புரிந்திட நம்பி ஏற்றிட உதவுவதை நாம் காண்கின்றோம். ஏனெனில் தங்கள் வாழ்விலும், தங்களை சுற்றியும் நடப்பவற்றை, அவர்கள் புரிந்துக்கொள்ள இது மட்டுமே வழியாய் இருந்தது. அதை அவர்கள் புரிந்துகொண்ட உடனேயே அவர்களது அடையாளமே முற்றிலுமாய் மாறியது - மனோதிடமும், ஆன்மிக ஆற்றலும், துன்பங்களை தாங்கும் தெம்பும், புத்துணர்வும் புதுவாழ்வும் அவர்களில் மிளிர்ந்தது! இதுவே தெளிவான அடையாளத்தின் சிறப்பாற்றல்!

உயிர்ப்பின் அழைப்பாய் இன்று நமக்கும் இதுவே வந்தடைகின்றது... உயிருள்ள வார்த்தைக்கு செவிகொடுப்போம். வார்த்தை மனிதரானார், அவர்களிடையே வாழ்ந்தார். ஆனால் அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. அதே வார்த்தை உயிர்த்து வந்தபோது புதிதாய் அவரை உணர்ந்தார்கள். வாழ்வான வார்த்தை இது, வரலாறு படைத்த வார்த்தை இது, புது வாழ்வும் புத்துணர்வும் அவர்களுக்கு தரக்கூடிய வார்த்தை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். அதே வார்த்தை இன்றும் நம்மோடு வாழ்கின்றார், நம்மோடு பேசுகின்றார் என்று உணர நம்மை அழைக்கிறது இந்த நாட்களின் வழிபாடு. விவிலியத்தில், திருவழிபாட்டிலும், நம்மை சுற்றி நடக்கும் நிகழுவுகளிலும் இறைவன் நம்மோடு பேசுகின்றார் என்பதை நாம் உணர்கின்றோமா? செவிகொடுக்கின்றோமா?

உண்மையில் நாம் செவிகொடுத்தோம் என்றால் இறைவார்த்தை நம்மிடம் பல கேள்விகளை எழுப்பும்: நம் ஆழமான அடையாளம் என்ன? வாழும் வார்த்தை விவிலியத்தில், திருவழிபாட்டிலும், சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும் உன்னிடம் பேசுவதை நீ அறிந்திருக்கிறாயா? அதை புரிந்துகொள்ள உண்மையில் முயன்றுள்ளாயா? அதையே உன் வாழ்வாக்க நினைத்துள்ளாயா?



The Easter Call: Listen to the Living Word

Thursday within the Easter octave: 5th April, 2018

Acts 3: 11-26; Lk 24:35-48

Understanding the Scriptures was an essential part of realising their identity for the disciples. From yesterday we see the Risen Lord take upon himself the task of opening their minds to the scriptures,  because it was from that understanding that they were able to make sense of all that they were going through. Once clarified, their identity was extraordinarily strong and they accomplished feats that nobody would imagine. That is the power of clear and specific identity.

The Easter Call thus is to Listen to the Living Word. The Word made flesh, lived among them and they failed to completely grasp what was happening. When the Lord resurrected, they beheld the Word anew...now it was a Word that was fulfilled, accomplished in history, holding out to them new life and new meaning, an altogether new identity! It is the same Living Word that speaks to us today - in the Scripture, the Sacraments and the Situation around. Are we listening?

If we are truly listening we would hear these questions posed to us: what is your identity?  What does the Scripture say to you? Do you spend time listening to the Lord speak in and through the Scripture, the Sacrament and the Situation? Do you really seek to understand what the Lord wants of you today and strive to fulfill it?