Wednesday, May 9, 2018
THE LORD GOES... TO BE!
Tuesday, May 8, 2018
மே 9: ஆவியார் ஒளியாவார்
உண்மையை உணர்த்துவார்; அனைத்தையும் அறிவிப்பார்!
உண்மையனைத்தையும் தூய ஆவி நமக்கு உணர்த்தினாலும், நாம் பல வேளைகளில் அதை உணராமலேயே இருக்கிறோம்: ஒன்று, நமது அறியாமையால், அல்லது அறியாமல் இருந்துவிடலாம் என்ற சோதனையால் அல்லது இதை அறிய எனக்கு விருப்பமில்லை என்ற நமது பிடிவாதத்தால்.
அறியாமை இருப்பின், பெரும் தடை இல்லை ஏனெனில் ஒளியாம் ஆவியானவர் வரும்போது அனைத்தும் தெளிவு பெற்றுவிடுகிறது, நமது அறியாமை என்னும் இருள் விலகிவிடுகின்றது. பவுல் மற்றும் பலரை போல அறியாதிருந்தவர்களின் அகக்கண்களை திறந்த ஆவியாரை நாம் இறைவார்த்தையில் சந்திக்கிறோம்.
அறிந்துகொள்வதால் பல பிரச்சனைகளும் பொறுப்புக்களும் வருகின்றனவே, ஆகையால் அறியாதவண்ணமே இருந்து விடலாமா என்ற ஒரு சோதனை நம்மை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு! சீடர்களுக்கு அது நேர்ந்தது - காரணம், பயம்! ஆனால் துணிச்சலின் ஆவி, மனதிடத்தின் ஆவி நம்மை மேற்கொள்ளும் போது இந்த சோதனை காலைப்பணியாய் மறைந்துவிடுகிறது.
எதையும் நான் அறிந்துகொள்ள தயாராக இல்லை என்று முடிவெடுத்து இறைவனின் வார்த்தையை தள்ளி வைக்கும்போது நாம் வேண்டுமென இருளை தேடிச்செல்கிறோம்! ஏதென்சு நகர மக்கள் இதை தான் இன்றைய முதல் வாசகத்தில் செய்கிறார்கள்... இறைவார்த்தை அறிவிக்கப்பட்டபோது, அதை பார்த்து சிரிக்கிறார்கள், ஏற்க மட்டுமல்ல அதை புரிந்துகொள்ளவே மறுக்கிறார்கள்: அவர்களது தற்பெருமை அவர்களை உண்மையை அறிய இயலாது செய்துவிடுகிறது.
வார்த்தையை கேட்கவும், புரிந்துகொள்ளவும் திறந்த மனதோடு நாம் தூய ஆவியாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், உண்மையை இழப்பது நாமே! ஒளியை இழப்பது நாமே! தெளிவை, வாழ்க்கைக்கு வழியை இழப்பது நாமே!
உணர்வோம், வார்த்தையையும், அதை அறிவிக்கும் இறை ஆவியாரையும் ஏற்க தயாராவோம்!
Preparing to Receive the Spirit? #2
Wednesday, 6th week in Eastertide
Monday, May 7, 2018
மே 8: ஆவியார் அனலாவார்!
ஆறுதலாளிக்கும் ஆவி, அனலாய் வரும் ஆவி!
தி.ப. 16: 22-34; யோ 16: 5-11
இன்று காலை பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது ஒரு அம்மா தன் சிறுபிள்ளையை கைபிடித்து ஏறக்குறைய தர தரவென இழுத்து செல்வதை கண்டேன். அழுதுகொண்டே அந்த சிறுவன் தன்னால் முடிந்தவரை போராடிக்கொண்டிருந்தான். எங்கும் காண்கின்ற காட்சிதான்... பள்ளிக்கு செல்லும் காட்சி. தன் தாயோடே இருக்க வேண்டும் என்று விரும்பும் அந்த சிறுவனும் தவறல்ல, படித்து முன்னேற வேண்டும் என துடிக்கும் தாயும் தவறல்ல...இது வாழ்க்கையின் எதார்த்தம்!
தன் சீடர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டுமென துடிக்கிறார் இயேசு. அவர்களோ அவர் பிரிந்து செல்கிறார் என்று வருத்தம் கொள்கின்றனர். முன்னேற அவரே ஒரு திட்டமும் வைத்திருக்கிறார்... ஆவியானவர்! இறைவார்த்தை நம்மை இவ்வாரத்தின் இறுதியில் வரும் பெருவிழாவுக்கு தயார் செய்ய தொடங்கிவிட்டது. ஆவியாரை சந்திக்க நாம் தயாரா?
தூய ஆவியானவர் வெறும் ஆறுதலின் ஆவியல்ல, அவர் அனலாவார்! சுட்டெரிக்கும் அனல், தூய்மைப்படுத்தும் அனல், புடமிடும் அனல்... அதனால் தான் அவரை சந்தித்த முதல் தருணத்திலேயே, அனைவரும் கேட்கும் முதல் கேள்வி... நான் என்ன செய்ய வேண்டும்? என்னையே மாற்றிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? மீட்பு பெற நான் என்ன செய்ய வேண்டும்?
அதே கேள்வியை கேட்க நாமும் தயாராவோமா?... இறைவனுக்கு ஏற்றவனாக, ஏற்றவளாக வளர நான் என்ன செய்ய வேண்டும்: ஆவியே அனலாய் வா... என் வாழ்வு தூய்மைபெற ஒளிசேர்க்க வா!
தன் சீடர்கள் அடுத்த நிலைக்கு முன்னேறவேண்டுமென துடிக்கிறார் இயேசு. அவர்களோ அவர் பிரிந்து செல்கிறார் என்று வருத்தம் கொள்கின்றனர். முன்னேற அவரே ஒரு திட்டமும் வைத்திருக்கிறார்... ஆவியானவர்! இறைவார்த்தை நம்மை இவ்வாரத்தின் இறுதியில் வரும் பெருவிழாவுக்கு தயார் செய்ய தொடங்கிவிட்டது. ஆவியாரை சந்திக்க நாம் தயாரா?
தூய ஆவியானவர் வெறும் ஆறுதலின் ஆவியல்ல, அவர் அனலாவார்! சுட்டெரிக்கும் அனல், தூய்மைப்படுத்தும் அனல், புடமிடும் அனல்... அதனால் தான் அவரை சந்தித்த முதல் தருணத்திலேயே, அனைவரும் கேட்கும் முதல் கேள்வி... நான் என்ன செய்ய வேண்டும்? என்னையே மாற்றிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? மீட்பு பெற நான் என்ன செய்ய வேண்டும்?
அதே கேள்வியை கேட்க நாமும் தயாராவோமா?... இறைவனுக்கு ஏற்றவனாக, ஏற்றவளாக வளர நான் என்ன செய்ய வேண்டும்: ஆவியே அனலாய் வா... என் வாழ்வு தூய்மைபெற ஒளிசேர்க்க வா!
Preparing to Receive the Spirit?
Tuesday, 6th week in Eastertide
When we truly meet the Spirit: it can be a challenging experience! The Spirit is not only the Spirit of consolation but also of conviction. Because, the Spirit is the Spirit of truth and justice! We would do well to listen to the Spirit or we shall grow obstinate and obsolete.
The Word has begun to prepare us these days to celebrate the coming of the Spirit at the end of this week... let us take focus our attention on the Spirit of the Lord. Let us ask that all important question: What should I do to be acceptable in the eyes of God?
Sunday, May 6, 2018
Love that Prevails
Monday, 6th week in Eastertide
7th May, 2018: Acts 16: 11-15; Jn 15:26 - 16:4aThe Lord will open minds, inspire hearts and remove blocks, that we may have all the back up needed to take the message far and wide. This has been, just as it is at this present moment, my experience too, personally! How many times I would have felt the providence of God, at the exact right moment! Persons coming to my aid, friends pitching in their bit, and so many other unbelievable ways in which the Lord has provided, or numerous ways in which Love has prevailed!
Let us surrender ourselves into the hands of God, the love that prevails over everything and be formed into that love ourselves!
Saturday, May 5, 2018
WE ARE CHOSEN
6th Sunday of Easter: 6th May, 2018
Acts 10: 25-26,34-35,44-48; 1 Jn 4:7-10; Jn 15: 9-17
We are Chosen, we are chosen people of God, we are a chosen race: this is a truth that is repeatedly stressed in the Word today. We are given a sign that we are chosen and there is a reason for having been chosen and there is a fruit that is expected of us because we are chosen. Let us understand them one by one.
We are chosen: that needs two clarities. One, we did not choose, but we are chosen! So it is none of our merit that we are within the count of the chosen! If we are here, it is because we are chosen! It not only fills us with a feeling of being special, but it should also fill us with an awe of the inner nature offered unto us. The second clarity is the same as what we said finally here: being chosen is not merely a privilege, but a burden too!
The Sign of being Chosen: Spirit. The sign of being chosen is given in the third person of the Trinity - the Holy Spirit who comes to dwell in us! We become dwelling places of the Spirit, chosen dwelling places of the Spirit (1Cor 3:16 & 6:19). That means our being chosen necessitates two self understandings within us: One, that we are the people of the Spirit and secondly, we belong to God! (1st Reading)
The Reason for being Chosen: Joy. A joy that is complete, is what the Lord wants to offer us. That is the reason for which the Lord has chosen us. A joy that does not fade with time, a joy that does not depend on external conditions and fulfillment of one's desires, a joy that is eternal because the source of it is eternal, timeless: it comes from the Lord! It resides in our hearts and comes from the Spirit who is within; no external conditions can take it away! The Lord fills us with a joy that is not like what the world gives, not like the joy that our possessions give, unlike the joy that our pleasures give... this is the joy that the Lord alone can give! (Gospel Reading)
The Fruit of being Chosen: Love. That you may bear fruit, and bear it abundantly! The fruit is love, the outcome of being chosen is the love that we hold out to every person around us. To love as God loved; without counting the cost, without thinking whether the other deserves it or not; without losing any chance of forgiving and enduring. That is true love and that is the love that we are called to live. (2nd Reading)
We are Chosen... chosen by the Spirit, chosen to be joyful, chosen to love! If we do not love, we do not see the fruits of having been chosen; if we do not have the fruits, it means we do not have the joy of having been chosen; if we do not have the joy of having been chosen, it means we have not allowed the Spirit of the Lord to dwell within us!
Let us remember! we are the people of the Spirit, we are the Chosen people of God.
Thursday, May 3, 2018
We, the Holy Spirit and Love!
Friday, 5th week in Eastertide
And Christ goes a step further and says: not just traditions and laws, but even your life, you should be ready to lay down! That is true love. If the Son of God has given up everything for the love that he has for us, why do we hesitate to give up anything...especially our ego, our selfishness, our vain glory!!!
மே 4: ஆவியும் நாங்களும்
நீ, நான், ஆவியார் மற்றும் அன்பு
தூய ஆவி நம்மை ஆட்கொள்ளும் போது நாம் செய்வது அனைத்திலும், நாம் எடுக்கும் முடிவுகளிலும், நாம் அளிக்கும் முக்கியத்துவங்களிலும் முற்றிலும் முழுமையானதொரு உணர்வை நாம் பெறுவோம். அந்த முழுமையின் ஊற்று அன்பு. ஆவியானவர் அன்பின் ஆவியானவராவார்...ஏனெனில் அவர் கடவுளின் ஆவி, கிறிஸ்துவின் ஆவி, தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள அன்புறவின் ஆவி...
இதனால் தான் அப்போஸ்தலர்கள், பிரச்சனைகளை சந்திக்கும் போது, அவற்றை ஒரே திருச்சபையாய் அலசிய போது, எதையும் விட்டுக்கொடுக்க முன் வந்தனர்... அவர்களது பாரம்பரியம், அவர்களது யூத நம்பிக்கையின் அடையாளம், அனைத்தையும் துறக்க அவர்கள் தயாராய் இருந்தனர்... ஒரே காரணம்: மக்கள் மீதிருந்த அன்பு, சகோதர சகோதரிகள் மீதிருந்த அன்பு, ஆவியின் உறவில் அவர்களில் நிறைந்திருந்த அன்பு.
கிறிஸ்துவோ தன் வாழ்விலே, சட்டங்களையும், பாரம்பரியங்களையும் மட்டும் அல்ல, தன் உயிரையே அடுத்தவருக்காக கொடுக்க முன்வருவது தான் உண்மை அன்பு என்று எண்பித்தார். நாமும் தூய ஆவியால் நிரப்பப்படும் போது.. நமது சுயநலன்கள், விருப்பு வெறுப்புக்களையெல்லாம் தாண்டி, அன்பினால் மட்டுமே இயக்கப்படுவோம்!
இன்று கிறிஸ்து நமக்கு விடுக்கும் அழைப்பு இதுவே: என் சகோதரனே சகோதரியே, நீ, நான், மற்றும் தூய ஆவியானவர் இணையும் போது அங்கு உண்மை அன்பு பிறக்கிறது! இணைய நீ தயாரா?





